மீண்டும் இணையவிருக்கும் ஏஆர் ரஹ்மான் - சாய்ரா தம்பதி!

top-news
FREE WEBSITE AD

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு, அவரை பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.இதனை ஏ.ஆர்.ரகுமானும் உறுதி செய்த நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தன்னை ரஹ்மானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டு இருந்தார்.

தற்போது வரை இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து கேட்காத நிலையில் அவர்கள் மீண்டும் இணையலாம் என கூறப்படுவதால் ஏஆர் ரகுமானின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவானதாகவும் இதனால் வேறு வழியின்றி ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்தது திரையுலகம் மட்டுமல்லாது, ஏஆர் ரகுமானின் ரசிகர்களையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

காரணம் இதுவரை எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காத ஏஆர் ரகுமானை சாய்ரா பானு பிரிவதாக அறிவித்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று திடீரென ஏஆர் ரகுமான் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறிய நிலையில் நீண்ட தூர பயணம் காரணமாக டீஹைட்ரேஷன் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு ஆடியோ வெளியிட்டு இருந்த சாய்ரா பானு தனது கணவர் உடல்நலம் பெற பிரார்த்திப்பதாகவும் அதே நேரத்தில் நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை எனவே ஏஆர் ரகுமானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.

இதை அடுத்து ஏஆர் ரகுமானின் உடல்நல குறைவால் அதிர்ச்சி அடைந்த சாய்ரா பானு விரைவில் அவரை நேரில் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் மீண்டும் இணைவார்கள் என கூறப்படுவதால் ஏஆர் ரகுமானின் குடும்பத்தினரும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *