ரஜினி ரசிகர்கள் விஜய் கட்சிக்கு ஆதரவா?

top-news
FREE WEBSITE AD

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, தனது அரசியல் பிரவேசம் குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் அவர் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். 

விரைவில் மதுரையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள விஜய், அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாக விஜய் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டைரக்டர் எச் வினோத் இயக்குகிறார். 

அதற்கு முன்பாக வரும் 22ம் தேதி, விஜய் தனது 50வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதன்பிறகு பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு கடந்த ஆண்டை போலவே பரிசளிப்பு விழாவை 2 கட்டங்களாக நடத்தவும் முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் விஜய் வெளியிட்டுள்ளார். இதில் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுடன் கல்வி விருதுகளை வழங்க உள்ளார். 

நடிகர் விஜயை விட பலமடங்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகராக இருப்பவர்தான் நடிகர் சூப்பர் ஸ்டார். கடந்த 1990களில், ரஜினிக்கு இருந்த ரசிகர் கூட்டம், விஜய்க்கு விட மிக அதிகம். அவருக்கான இடத்தை இதுவரை ரசிகர்கள் யாருக்கும் தராமல் இருந்து வந்தனர். ஆனால் அவரை பலமுறை அரசியலுக்கு ரசிகர்கள் அழைத்தும் அவர் கடைசி வரை வரவில்லை. 

ஆனால் பாட்ஷா படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற காலகட்டத்தில், பாஜக ரஜினிக்கு மிகப்பெரிய ஆதரவு தந்தது. அன்றைய பிரதமர் வாஜ்பாய், ரஜினியிடம் பர்சனலாக பேசி, நீங்கள் தமிழக முதல்வராக எல்லாவிதமான உதவிகளையும் செய்கிறோம். அரசியலுக்கு வாருங்கள் என்ற அழைத்த நிலையிலும், ரஜினிகாந்த் மறுத்துவிட்டார். 

இதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகளாக காத்திருந்து ஏமாந்து நொந்து போன ரஜினி ரசிகர்கள் கூட்டத்தை சேர்ந்த பலர், இப்போது அரசியல் கட்சி துவங்கியுள்ள விஜய் பக்கம் வந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

ரஜினியை விட இப்போது விஜய்க்கு இமேஜ் அதிகமாக இருக்கிறது என்று அவர்களே தாமாக முன்வந்து, விஜய் கட்சியில் சேர்ந்து வருவதாகவும் தெரிகிறது. இப்படி ரஜினி ரசிகர் கூட்டம், விஜய்க்கு ஆதரவாக மாறும் என்பதை எந்த அரசியல் கட்சிகளும் எதிர்பார்க்கவில்லை. இதனால் விஜயின் அரசியல் பலம் அதிகரித்து வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]