இரு துறைகளில் இணைந்து பணியாற்ற மலேசியாவும் கிர்கிஸ் குடியரசும் ஒப்புக் கொண்டுள்ளன!

- Muthu Kumar
- 26 Jun, 2025
புத்ராஜெயா, ஜூன் 26 -
இஸ்லாமிய வங்கி முறையை உருவாக்குவது உட்பட ஹலால் பொருள்களின் வர்த்தகத்தை வலுப்படுத்துவதில் மலேசியாவும் கிர்கிஸ்தான் குடியரசும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன.
அக்குடியரசிற்குத் தொடர்புடைய வசதிகள், சேவைகளை மேம்படுத்துவதற்காக இரு துறைகளிலும் தனது நிபுணத்துவத்தை, மலேசியா வழங்கவிருக்கின்றது.
நேற்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற கிர்கிஸ்தான் குடியரசின் அதிபர் ஸபாரோவ் உடனான சந்திப்பின் போது, சிறந்த நிதி அமைப்பை உருவாக்க இஸ்லாமிய வங்கிகள் நிறுவுவது குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தியதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்."நாங்கள் கலந்துரையாடினோம். நிச்சயமாக, இஸ்லாமிய வங்கி, ஹலால், கட்டுமானம், நிதி ஏற்பாடுகள், திட்டங்கள் குறித்த பிரச்சினைகள், இஸ்லாமிய வங்கிகள் அமைப்பதும் உட்பட்டுள்ளது,” என்றார் அவர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் ஒத்துழைப்பு, குறிப்பாக, கிர்கிஸ்தான் நாட்டின் மின்சார உற்பத்திக்கு முதன்மையாக விளங்கும், ஹைட்ரோ சக்தி, இரு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றம் குறித்தும் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக, அன்வார் கூறினார்.
Malaysia dan Kyrgyzstan bersetuju bekerjasama memperkukuh sektor perbankan Islam dan perdagangan produk halal. Perbincangan turut merangkumi tenaga boleh baharu, khususnya hidro, serta pertukaran pelajar dan penyelidik antara universiti kedua-dua negara bagi meningkatkan kepakaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *