புதிய மோசடி  குறித்து மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!புக்கிட் அமான் எச்சரிக்கை! .

top-news
FREE WEBSITE AD

சிங்கப்பூரில் வெளிவந்துள்ள புதிய மோசடி  குறித்து விழிப்புடன் இருக்குமாறு மலேசியர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் கைத்தொலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களை குறி வைத்து செயல்படுகின்றனர் என்று புக்கிட் அமான்  எச்சரித்துள்ளது

புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இயக்குநர்  டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறுகையில், இந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சாதனங்கள் ஹேக் செய்யப்பட்டதைக் காட்டும் பாப்-அப் செய்திகளை அவர்களின் கணினிகள் அல்லது மடிக்கணினிகளில் பெறுவார்கள்.

மோசடிக்காரர்கள் அனுப்பும் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண் மூலம் தொழில்நுட்ப ஆதரவு குழுவை அழைக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.பாதிக்கப்பட்டவர் அந்த எண்ணை அழைக்கும் போது மைக்ரோசாப்ட் அல்லது ஆப்பிளின் ஆதரவு ஊழியர்களாக காட்டிக் கொள்ளும் மோசடி செய்பவர்கள் தங்கள் சாதனங்கள் ஹேக் செய்யப்பட்டு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவருக்கு நல்லவர்களை போல தெரிவிப்பார்கள்.

  ஹேக்கிங் செய்வதிலிருந்து நாம் விடுபட  ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்படும் என்றும் மோசடி கும்பல் கூறுவார்கள்.பின்பு ஆன்லைன் வங்கி இணையதளங்களிலும் உள்நுழைய வேண்டும், என்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதற்காக மோசடி செய்பவர்கள் கூறுவார்கள். இருப்பினும், அவர்கள் இணையதளங்களில் உள்நுழைந்ததும் மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமல் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுவதற்கான குறுஞ்செய்திகளை அனுப்பி பயன்படுத்துவார்கள் என்று டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறினார்.

சிங்கப்பூரில் இதுபோன்ற வழக்குகள் அதிகம் காணப்பட்டாலும், மலேசியாவில் உள்ள நிலைமையை சிசிஐடி கண்காணித்து வருவதாகவும், அதுபோன்ற ஏதேனும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறினார்.

இது போன்ற விஷயங்கள் மலேசியாவிற்கு பரவும் சாத்தியத்தை நாங்கள் மறுக்கவில்லை.உண்மையாக மோசடி செய்பவர்கள் கை தொலைபேசிகளிலும் இதே தந்திரத்தை பயன்படுத்தக்கூடும். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் இதுபோன்ற விஷயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப்  கூறினார்.

பொதுமக்கள் எப்பொழுதும் கவனமாக இருக்கவும் சந்தேகத்திற்குரிய பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்கவும்என்று ராம்லி அறிவுறுத்தினார்.

உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு இருந்தால் வங்கிகள் மற்றும் காவல்துறைக்கு புகார் செய்யுங்கள்" என்றும் அவர் மேலும் கூறினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *