விமர்சனங்கள் தாண்டி வெற்றி நடை போடும் கல்கி 2898 AD!

top-news
FREE WEBSITE AD

பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள கல்கி 2898 AD இந்தப் படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தினை இந்தியாவின் மிகவும் தொன்மையான படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. இந்த படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது.

படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததால் படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 37 கோடிக்கு மேல் வசூல் செய்தது. முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் மொத்தம் 191.5 கோடி வசூல் செய்தது. இரண்டு நாட்களில் மொத்தம் ரூபாய் 298.5 கோடி வசூல் செய்தது. முதல் நாள் வசூலை விடவும் இரண்டாவது நாள் வசூல் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் குறைந்தது படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தாலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுவில் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என படக்குழு நம்புகின்றது. படக்குழு தெரிவித்துள்ள வசூலில் உலகம் முழுவதுமான வசூலைத்தான் குறிப்பிட்டுள்ளது. மாறாக இந்தியாவில் இவ்வளவு வசூல் என்றோ, மற்ற நாடுகளில் இவ்வளவு வசூல் என்றோ குறிப்பிடப்படவில்லை.

படம் 2டி, 3டி மற்றும் ஐ மேக்ஸ் திரையிலும் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. படம் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. மும்பையில் இந்த படத்தின் டிக்கெட் ரூபாய் 2300க்கு அதிகபட்சமாக அதிகாரபூர்வமாகவே விற்பனை செய்யப்பட்டது. ஆந்திராவில் படத்தின் ரிலீசினை முன்னிட்டு ரூபாய் 75இல் இருந்து ரூபாய் 125 வரை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது.

படம் வெளியாகி உலகம் முழுவதும் பாசிடிவ் ரெஸ்பான்ஸ்களையே பெற்று வந்தது. குறிப்பாக படத்தின் இறுதி 45 நிமிடங்கள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் அளவிற்கு காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. பிரபாஸும் அமிதாப் பச்சனும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியெல்லாம் கூஸ்பம்ஸ்தான். படத்தின் அடுத்த பாகத்திற்கு கொடுக்கப்பட்ட லீட் எல்லாம் வெறித்தனம் என்றே கூறவேண்டும். படம் பார்த்த ரசிகர்கள் புராஜெக்ட் கே என்றால் என்ன வென்று தாங்களே விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அடிபடையில் படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 415 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இதில் முதல் நாளில் 191.5 கோடிகளும், இரண்டு நாட்களில் 298.5 கோடிகளும் மூன்று நாட்களில் ரூபாய் 415 கோடிகளும் வசூல் செய்துள்ளது. இதன் அடிப்படையில் முதல் நாளில் 191.5 கோடிகளும், இரண்டாவது நாளில் ரூபாய் 107 கோடிகளும் வசூல் செய்துள்ளது. அதேபோல் மூன்றாவது நாளில் 116.5 கோடிகளை வசூல் செய்துள்ளது. படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் 415 கோடிகளை படம் வசூல் செய்து அசத்தலான வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது.

படம் வார இறுதி நாளான இன்றும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து 500 கோடிகளைக் கடக்கும் என படக்குழு எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *