அமீர்கான் வீட்டிற்கு வந்த சல்மான், ஷாருக்!

- Muthu Kumar
- 13 Mar, 2025
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு பாலிவுட்டை கலக்கி வருபவர் அமீர்கான்.
சமீப காலமாக இவர் படங்கள் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார். நல்ல கதைகளை தேர்வு செய்து தயாரித்தும் வருகிறார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் இவரை ஒரு லெஜண்ட் என்றும் அழைப்பார்கள். இந்நிலையில், நேற்று இரவு அமீர்கான் வீட்டில் பெரிய பார்ட்டியே நடந்துள்ளதாம். இதற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் கலந்துகொண்டுள்ளனராம். ஆனால் எதற்கான இந்த பார்ட்டி, ஏன் இந்த கொண்டாட்டம் என்பது தான் தெரியவில்லை என கூறப்படுகிறது. இதுவரை இப்படியொரு பார்ட்டி நடந்ததே இல்லையாம்.
பாலிவுட்டில் ஐகானிக் ஹீரோக்களாக திகழ்பவர்கள் அமீர் கான், ஷாருக்கான், சல்மான் கான். பாலிவுட் திரையுலகில் இவர்களை பற்றி செய்தி வராத நாட்களே கிடையாது. ஷாருக்கான் தொடர் வெற்றி மூலம் 1000 கோடி கலெக்சனை தந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அதேபோன்று சல்மான்கான் நடிப்பில் ரமலான் அன்று சிக்கந்தர் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
அதேபோன்று அமீர் கான் கடைசியாக நடித்த தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் மற்றும் லால் சிங் தத்தா படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வியடைந்தது. அதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இவரது தயாரிப்பில் உருவான Laapataa Ladies திரைப்படம் ஆஸ்கர் விருது வரை சென்று புகழ் பெற்றது. இப்படத்தில் பெண்கள் படும் அவலங்களை தோலுரித்து காட்டியது. இப்படத்தை அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் தயாரித்திருந்தார்.
அமீர் கான் மார்ச் 14ஆம் தேதி தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்கு முன்பாக பிறந்தநாளை கொண்டாடும் நோக்கில் மிகப்பெரிய அளவில் தனது வீட்டில் நேற்றிரவு கொண்டாடியுள்ளார். இதுவரை தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடியது இல்லையாம். இதுதான் முதல் முறை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியான செய்திகளிலும் இதையே குறிப்பிட்டுள்ளன. நேற்றிரவு இவரது வீட்டில் நடந்த பார்ட்டியில பாலிவுட்டின் கான் நடிகர்களான ஷாருக், சல்மான் விசிட் அடித்திருக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
சல்மான் கான் மற்றும் ஷாருக்கானும் அமீர்கான் வீட்டிற்கு சென்று அவரது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டு குதூகலமடைந்துள்ளனர். அதேபோன்று பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங், கரீனா கபூர், ராணி முகர்ஜி, ஹிருத்திக் ரோஷன், சையிப் அலிகான் ஆகியோர் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் இடம்பிடித்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகமே திரண்டு அமீர்கான் வீட்டிற்கு படையெடுத்தது இதுதான் முதல் முறையாம். படம் குறித்து சந்திப்புகள் மட்டுமே நடப்பது வாடிக்கையாம். 60வது பிறந்தநாளை பெரிய அளவில் அமீர்கான் கொண்டாடியுள்ளனராம்.
அமீர்கான், சல்மான் கான், ஷாருக்கான் ஆகிய மூவரும் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்தில் ஆட்டம் போட்டு கலக்கினர். மூன்று கான்களும் பல விழா மேடைகளில் கலந்துகொண்டிருந்தாலும், மூன்று பேரும் சேர்ந்து ஆட்டம் போட்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோன்று நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர்கானின் 60வது பிறந்தநாள் பார்ட்டியில் 3 கான் நடிகர்களும் இணைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *