ஹமாஸின் நண்பன் நான்! - அன்வார்
- Shan Siva
- 24 May, 2024
இஸ்ரேலில் உள்ள
பாலஸ்தீனக் கைதிகளை விடுவிப்பதற்குக் கைமாறாக ஹமாஸ் வசமுள்ள
பிணையாளிகளை விடுவிப்பது, இருநாடுகளின் உருவாக்கத்திற்கு
வழிசெய்வது போன்ற நிபந்தனைகளை அண்டை நாடுகள் விதித்துள்ளன.
அமைதியைக்
கொண்டுவரும் நோக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்த நிபந்தனைகளை ஏற்றுக்
கொள்ளும்படி ஹமாஸ் தலைவர்களிடம் நான் வலியுறுத்தி வருகிறேன் என்று அன்வார்
சொன்னார். கடந்த வாரம் கத்தார் நகரில் ஹமாஸ் பேராளர் குழுவினரை அன்வார்
சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“இதுவொரு குற்றமா ? நான் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறேனா 2?” என்று ஜப்பானின் தோக்கியோ. நகரில் நேற்று
நடைபெற்ற நிக்கே ஃபோரம் எனும் ஆய்வரங்கில் பேசியபோது அன்வார் வினவினார். ஹமாஸ் தலைவர்களை எனக்குத் தெரியும் என்பதால்
அவர்களிடம் நான் அந்த கோரிக்கையை விடுத்தேன்.அவர்கள் என்னை நண்பனாக பார்க்கின்றனர். சிறந்த ஆலோசனையை
வழங்குவதுதான் ஒரு நண்பனின் கடமையாகும் என்றார் அவர்.
ஹமாஸ் இயக்கம்
மீது ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா விதிக்கக்கூடிய தடைகளை மலேசியா ஏற்றுக் கொள்ளாது
என்று கடந்தாண்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஹமாஸ் இயக்கத்தை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாத அமைப்பாக
பிரகடனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இஸ்ரேல், ஹமாஸ், மேற்கத்திய வல்லரசுகள் ஆகியவற்றுக்கு இடையிலான
மறைமுகப் பேச்சுவார்த்தைக்கு சமரசப் பேச்சாளராக கத்தார் நாடு செயல்பட்டு
வருகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *