பயிற்சியின் போது காணாமல் போன இராணுவ வீரர் சடலமாக மீட்பு!

top-news

ஜுலை 6,


கடல்பயிற்சியின் போது காணாமல் போனதாக நம்பப்பட்ட இராணுவ வீரர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். நேற்று மாலை குவாந்தான் கடல் பகுதியில் டைவிங் பயிற்சியில் இராணுவக் குழு ஈடுப்பட்ட போது 30 வயது இராணுவ வீரர் காணாமல் போனதாகவும் மீட்புப் படையினரும் கடல்சார் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும், தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் இன்று காலை 10 மணியளவில் நீரில் மூழ்கியதாக நம்பப்பட்ட 30 வயது இராணுவ வீரரின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Adli Mat Daud தெரிவித்தார். 

டைவிங் பயிற்சியில் 4 ராணுவ வீர்ர்கள் ஈடுபட்ட நிலையில் குறித்த நேரத்தில் 3 இராணுவ வீரர்கள் நீருக்கடியிலிருந்து வெளியேறியதாகவும் ஒருவர் காணவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காணாமல் போன இராணுவ வீரர் 300 மீட்டர் தொலைவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் குவாந்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Adli Mat Daud தெரிவித்தார்.


Seorang anggota tentera yang dilaporkan hilang ketika latihan menyelam di perairan Kuantan ditemui maut pagi ini. Mangsa berusia 30 tahun ditemui 300 meter dari lokasi kejadian selepas operasi mencari dan menyelamat dijalankan oleh pasukan penyelamat dan agensi maritim.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *