குட் பேட் அக்லி படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் சாதாரணமாக போக முடியாது!

top-news
FREE WEBSITE AD

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அடுத்ததாக குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றத்தில் அஜித் காணப்படுகின்ற நிலையில் அடுத்தடுத்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அவர் அஜித் குமாரின் தீவிர ரசிகராக காணப்படும் நிலையில் இந்த படத்தில் ஃபேன் பாய் சம்பவத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விடாமுயற்சி ரிலீசான நிலையில் அடுத்து இரண்டு மாத இடைவெளியில் குட் பேட் அக்லி படம் ரிலீசாகவுள்ளது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ரசிகர்கள் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் மீது தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்தப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் மூன்று விதமாக வித்தியாசமான  நடிகர் அஜித்குமார் நடித்துள்ளார். படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில் அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகளை கடந்த ஆண்டு இறுதியிலேயே நடிகர் அஜித்குமார் நிறைவு செய்து விட்டார். இவற்றை நிறைவு செய்து விட்டே துபாயில் நடந்த கார் ரேசிங்கில் பங்கேற்க அஜித் சென்றிருந்தார். இந்த படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர்தான் ஸ்டண்ட் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் குட் பேட் அக்லி படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் சாதாரணமாக போக முடியாது என்றும் விக்ஸ் அல்லது ஹால்ஸ் எடுத்துக்கொண்டு தான் போக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை அமைப்பு மற்றும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து அவர்களை திரையரங்கில் கத்தி என்ஜாய் செய்ய வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கத்தி கத்தி தொண்டை வலியே வந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல விடாமுயற்சி படத்தை விட பத்து மடங்கு அதிகமான ஆக்ஷன் காட்சிகள் குட் பேட் அக்லி படத்தில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.பில்லா படத்திற்கு பிறகு அஜித்தை மீண்டும் ஆக்ஷன் அவதாரத்தில் குட் பேட் அக்லி படத்தில் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விடாமுயற்சி படத்திற்கும் சுப்ரீம் சுந்தர் தான் ஸ்டண்ட் மாஸ்டர். அந்த வகையில் விடாமுயற்சி படத்திற்கும் முழுமையான உழைப்பை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அஜித் படம் போன்று இல்லை என்ற ரசிகர்களின் கருத்திற்கும் அவர் பதிலளித்துள்ளார்.

 இரண்டு படங்களும் இருவேறு ஜானர்களில் உருவாகியுள்ளதாகவும் படத்தை என்ஜாய் செய்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். குட் பேட் அக்லி படம் அதிகமான கொண்டாட்டத்திற்கு உள்ளாகும் என்று தெரிவித்துள்ள சுப்ரீம் சுந்தர், அது போல இல்லாமல் வேறு ஜானரில் விடாமுயற்சி உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். விடாமுயற்சி படத்திற்காக இரண்டு ஆண்டுகளை கடந்து மகிழ் திருமேனி உழைத்துள்ள நிலையில் ரசிகர்கள் என்ஜாய் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *