சனி : 17 மே, 2025
02 : 41 : 01 AM
முக்கிய செய்தி

RM 40,000 சம்பளமாகப் பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழைகளா? அன்வார் கேள்வி!

top-news

மார்ச் 11,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகையுடன் சம்பளமாக RM 30,000 முதல் RM 40,000 வரையில் வருமானம் பெற்றாலும் ஏழை வேடம் போடுவதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடனில் தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மக்கள் தங்களை வழிநடத்த கூடிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அவர்களின் பொருளாதாரத்தை முறையாகக் கட்டமைக்காமல் கடனில் சிக்கினால் மக்களின் வளமானப் பொருளாதாரத்தை இவர்கள் எப்படி கட்டமைப்பார்கள் எனும் கேள்வியை அன்வார் முன் வைத்துள்ளார்.

சராசரி குடிமகன் சம்பளமாக RM 30,000 முதல் RM 40,000 பெறுவதற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் இவர்களுக்கு அந்த வாய்ப்பை மக்கள் வழங்கியும் நிதி நிர்வாகத்திறன் இல்லாமல் இவர் வாழ்ந்துவிட்டு கடன் சுமைக்கு ஆளாவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்பு நிதி நிர்வாகம் என்பதை மறந்து இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என அன்வார் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

Perdana Menteri Anwar Ibrahim mempertikaikan dakwaan sesetengah Ahli Parlimen mengalami masalah kewangan walaupun menerima gaji RM30,000–RM40,000 sebulan. Beliau menegaskan bahawa pemimpin harus bijak mengurus kewangan peribadi sebelum diberi tanggungjawab mengurus ekonomi negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *