இளைஞர்களின் கோபத்தை மதிக்கிறேன்! நியாயமானப் போராட்டத்தில் உணர்ச்சிவம் வேண்டாம்! – அன்வார்

top-news

ஜூன் 25,


ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் தமது உருவப் பதாகைகள் எரியூட்டப்பட்டிருந்தாலும் இளைஞர்களின் கோபத்தைத் தாம் மதிப்பதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். சபா பல்கலைக்கழக மாணவர்களின் செயல் வருத்தமளிக்கும் வகையிலிருந்தாலும் அவர்களின் நோக்கம் நியாயமானது என்றும் நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும் தெருக்களில் சீர்த்திருத்த பேரணியின் போது இவ்வாறு நடந்துக் கொண்டதாகவும் அன்வார் நினைவூட்டினார். இளைஞர்களின் போராட்டத்தால் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதுமானது என அன்வார் தெரிவித்தார். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நோக்கம் ஊழலுக்கு எதிராக நாம் இன்னும் வலுவாகப் போராட வேண்டியிருப்பதை உணர்த்தியிருப்பதாகவும் ஆனால் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகத் தங்கள் நோக்கத்திற்காகச் செயல்படும்படி பிரதமர் Datuk Seri Anwar Ibrahim இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது போதுமானது. அதை மீறி சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகம் அவர்கள் உயர்கல்வி தடைப்படும்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கேட்டுக்கொண்டார்.


PM Anwar Ibrahim menyatakan beliau menghormati kemarahan belia yang memprotes rasuah walaupun potret dirinya dibakar. Beliau menyeru mereka berjuang secara rasional tanpa emosi dan meminta universiti tidak mengambil tindakan keras terhadap pelajar terlibat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *