ஹரிமாவ் மலாயா, உலகக் கோப்பையில் பங்கேற்பது சாத்தியமே - ஜமால்!

- Muthu Kumar
- 04 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 4-
மலேசிய கால்பந்து ஜாம்பவான் டத்தோ ஜமால் நசிர் இஸ்மாயில், ஹரிமாவ் மலாயா என்று அழைக்கப்படும் மலேசிய தேசிய கால்பந்து அணி 2030 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்பது சாத்தியமல்ல என்று கருதவில்லை. அவர் கூறுகையில், பூர்வீக இறக்குமதி வீரர்களை இணைப்பதன் மூலம் அணியை பலப்படுத்துவது, இந்த இலக்கை அடைய உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபத்தில், வியட்நாமை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வெற்றி, 11 ஆண்டுகளாக அந்த அணிக்கு எதிராக வெற்றி பெறாத மோசமான பதிவை முறியடித்தது. இந்த வெற்றியில், கேப்ரியல் பால்மரோ, ஹெக்டர் ஹெவல், ஜோவோ பிகுரேடோ, ரோட்ரிகோ ஹோல்காடோ உள்ளிட்ட புதிய இறக்குமதி வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த வெற்றி, அணியின் திறனை வெளிப்படுத்துவதாகவும், 2027 ஆசியக் கோப்பை, 2030 உலகக் கோப்பைக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதாகவும் ஜமால் கருதுகிறார்.
ஜமால் மேலும் கூறுகையில், நமது வம்சாவளி வீரர்கள் மலேசிய இரத்தம் கொண்டவர்கள். அவர்களின் திறமைகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இப்போது தொடங்கினால், அரேபிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா போன்ற அணிகளுடன் போட்டியிட முடியும். உள்ளூர் வீரர்களின் முக்கியத்துவத்தை அவர் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் உலகளாவிய மட்டத்தில் போட்டியிடும் திறனை இன்னும் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஹரிமாவ் மலாயாவின் உலகக் கோப்பை கனவு, சரியான திட்டமிடல், வீரர்களின் அர்ப்பணிப்புடன் நிச்சயம் நனவாகும் என்பது ஜமாலின் நம்பிக்கையாக உள்ளது.
Datuk Jamal Nasir Ismail yakin Malaysia mampu layak ke Piala Dunia 2030 dengan gabungan pemain warisan dan import. Kemenangan 4-0 ke atas Vietnam bukti kekuatan pasukan. Beliau menegaskan perancangan rapi dan dedikasi pemain penting untuk capai impian itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *