வழக்க நிலைக்குத் திரும்பியது நீர் விநியோகம்!

top-news
FREE WEBSITE AD


ஷா ஆலம் செக்சன் 22, ஜாலான் புடிமானில் நீர்க் குழாய் உடைந்ததை அடுத்து நீர் விநியோகம் தடைபட்டத்த. இதனை அடுத்து,  அதனைச்  சரி செய்யும் பணிகள் நிறைவடைந்து இன்று அதிகாலை 6.00 மணியளவில் முழுமையாக நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது.

அட்டவணையிடப்படாத இந்த நீர் விநியோகத் தடை காலத்தில் முழு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து பயனீட்டாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது..

உடைந்து குழாயை சரி செய்யும் பணிகள் காரணமாக கிள்ளான், ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அந்நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

நீர் விநியோகம் தொடர்பான சமீபத்திய நிலவரங்களுக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூக ஊடகங்களான பேஸ்புக், இண்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்கள் வாயிலாவும் 15300 என்ற எண்களிலும் அல்லது https://www.airselangor.com/  என்ற அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம் என அந்நிறுவனம் கூறியிருந்தது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *