அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் தேவை-ஸ்டீவன் சிம் !
- Muthu Kumar
- 13 Oct, 2024
கோலாலம்பூர்: அக் 13-
செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக, சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தேவைப்படுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
AI, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றின் தாக்கம் குறித்து தனது அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட ஆய்வின் மூலம் தேசியப் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத 10 முக்கிய துறைகளில் இந்தத் தொழிலாளர்கள் பணியாற்ற தேவைப்படுகின்றனர் என்று அவர் விளக்கினார்.
டேலண்ட் கார்ப்பரேஷன் மலேசியா பெர்ஹாட் (டேலண்ட்கார்ப்) மற்றும் 10 தொழில் துறைகளில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) அடங்கும் என்று அவர் கூறினார்.உலகளாவிய வணிக சேவைகள், மருந்து உற்பத்தி, உணவு உற்பத்தி மற்றும் சேவைகள், மின்சாரம்,மின்னணுவியல், விண்வெளி,மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், மருத்துவ சாதனங்கள் மற்றும் ஆற்றல் மற்றும் சக்தி இதுபோன்ற துறைகளும் அடங்கும் என்று தெளிவுபடுத்தினார் சிம்.
அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் அறிக்கைகளை எதிர்மறையாகப் பார்க்காமல் எதிர்கால முன்னேற்றங்களுக்கான தயார்நிலை நோக்கிய ஒரு செயலூக்கமாக பார்க்க வேண்டும் என்று சிம் வலியுறுத்தினார்.பொதுமக்கள் இந்த அறிக்கையை எதிர்மறையாகவோ அல்லது அவநம்பிக்கையுடன் அல்லது கோபத்துடன் பார்க்க வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் அரசாங்கம் எதற்கும் தயாராக இருப்பதே நாங்கள் இதைச் செய்வதற்குக் காரணம் என்றும் கூறினார்.
தமது அமைச்சின் ஆய்வின் முதல் கட்டமான 10 தொழில் துறைகளை மேலும் 14 தொழில் துறைகளாக விரைவில் நீட்டிக்கப்படும் என்று மேலும் சிம் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *