மகளிர் எதிர்பார்க்கும் பசுமை பட்ஜெட் 2025! - MAICCI மகளிர் தலைவி HEMALA SIVAM

top-news
FREE WEBSITE AD

பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசு 2025 ஆம் ஆண்டுக்கான மலேசியா பட்ஜெட்டை வெளியிடவிருக்கும் நிலையில் MAICCI எனப்படும் இந்தியர்த் தொழில் வர்த்தகச் சம்மேளனத்தின் மகளிர் தலைவியும் APS MANJA நிறுவனத்தின் தலைமை இயக்குநருமான ஹேமலா சிவம், தமது பட்ஜெட் குறித்தானப் பார்வையைத் தமிழ் மலருடன் பகிர்ந்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் பசுமையானதாக அமைய வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்புகள் அனைத்து சமூகத்திடமும் இருக்கும் அவா. அத்தகைய நிதி பகிர்ந்தளிப்பில் பெண் தொழில்முனைவோர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களும் அவர்களுக்கு வர்த்தகத்தின் மீதான இலகுவான அணுகுமுறைக்கு முக்கிய பங்களிப்பைக் கொண்டிருக்க வேண்டும். முக்கியமாக இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு அவர்களின் வாழ்வியலும் உகந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். முக்கியமாகக் குடும்பச் சூழலுக்கிடையே வர்த்தக நிர்வாகங்களைக் கவனிக்கும் மகளிர்களுக்கானச் சிறப்புத் திட்டங்களையும் பயிற்சித் திட்டங்களையும் மடானி அரசு வழிவகுக்க வேண்டும்.

தொழில்முனைவோருக்கான நிதி மானியங்களும் ஊக்கத் தொகைகளுடன் வர்த்தகர்களிடையே இணைப்பை உருவாக்கி வர்த்தகப் பரிமாற்றங்களையும் கொண்டிருக்க அரசாங்கம் வர்த்தக இணைப்பை உருவாக்குவதில் முனைப்பெடுக்க வேண்டும். இதன் மூலமாக வர்த்தகக் கண்காட்சிகளும் ஏற்றுமதி இறக்குமதிக்கான முன்முயற்சிகளில் மகளிர் வர்த்தகர்களின் முக்கியத்துவமும் அதிகரிக்கும். தற்போதைய இயங்கலை உலகில், முறையானத் தகுதியான இலக்கவியல் தொழில்துறைகளில் மகளிரின் ஈடுபாடுகள் அதிகரித்திருக்கும் நிலையில் இயங்கலை தொழில்திறன் பயிற்சிகளுக்கு முறையான அரசு தகுதியுடன் பட்டறைகளும், முதல் மகளிர் வர்த்தகருக்கான வழிகாட்டலையும் அரசு வழங்க வேண்டும்.

இவை அனைத்தையும் சீராக நிலைபெற செய்ய முக்கிய திறவுகோலாக இருக்க வேண்டியது வரி விலக்கு. வரி விலக்கு எனப்படுவது மகளிர் தொழில்முனைவோர்களுக்குப் பலதரப்பட்ட வகையில் அவர்களின் சுமையையும் குறைக்கும். வரி விலக்கு வழங்கப்படும் குடும்பப் பெண்களுக்கு அத்தொகை தன் குடும்பச் சூழலை மேம்படுத்தவும் பேருதவியாகத் திகழும். அதிகமான மகளிர்த் தொழில்முனைவோர்கள் குடும்பச் சூழலின் காரணமாக முழுமையாகத் தங்கள் பங்களிப்பை வர்த்தகத்தில் வழங்க முடியாது தவிக்கும் சூழல் பெருகி வரும் நிலையில் வரி விலக்கும், மானியமும் அவர்களைத் தொடர்ச்சியாக வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கும் என்பதையும் உணர்ந்து, மடானி 2025 பட்ஜெட்டுக்காக எதிர்பார்க்கும் மலேசியர்களின் நானும் ஒருவர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *