அண்ணன் வாங்கிய கடனுக்கு என்னால் பொறுப்பேற்க முடியாது - நடிகர் பிரபு!

top-news
FREE WEBSITE AD

சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இது குறித்து பிரபல நடிகர் பிரபு தன்னுடைய விளக்கத்தை நீதிமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த். மற்றும் மனைவி அபிராமியும் சேர்ந்து ஈசன் புரோடக்ஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜை வைத்து ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர்.

அப்படத்தின் செலவுக்காக தனபாக்கியம் என்ற நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். ஆனால் படத்தினையும் ரிலீஸ் செய்யாமல் வாங்கிய காசையும் கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடிக்க பைனான்ஸ் நிறுவனம் நீதிமன்ற படியேறியது.

இதை தொடர்ந்து கொடுக்க வேண்டிய தொகை 9 கோடி நெருங்கிவிட்ட நிலையில் படத்தினை கைமாற்றி விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது படத்தின் ஷூட்டிங்கும் முடிக்கப்படாமல் இருப்பதால் இந்த வழக்கு மீண்டும் துவங்கியது.

இதன் பேரில் நடந்த விசாரணையில் ஈசன் நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகைக்காக சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தினை ஜப்தி செய்து பொது ஏலம் விடக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் ராம்குமார் வீடு தன்னுடையது இல்லை என்றும் தம்பி பிரபு பெயரில் இருப்பதாகவும் மனு அளித்திருந்தார். தற்போது பிரபு தரப்பும் தந்தை இருக்கும் போதே வீட்டை சகோதரர், சகோதரி சம்மதத்தின் பேரில் என் பெயரில் உயில் எழுதிவிட்டார்கள் என மனு அளித்திருக்கிறார்.

நீங்கள் இரண்டு பேரும் ஒரே வீட்டில் தானே வசிக்கிறீர்கள். அண்ணன் தரப்பு கொடுக்க வேண்டியதை நீங்கள் தந்துவிட்டு பின்னர் அவரிடம் பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே எனக் கேள்வி எழுப்ப நான் யாரிடமும் ஒரு பைசா கடன் வாங்கியதே இல்லை.

அண்ணன் நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். தன்னால் அதற்கு பொறுப்பேற்று கொள்ள முடியாது எனவும் தெரிவித்து இருக்கிறார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *