தனது நண்பரான நடிகர் மோகன் பாபுவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

- Muthu Kumar
- 08 Feb, 2025
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள தனது நண்பரான நடிகர் மோகன் பாபுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ரங்கம் பேட்டையில் நடிகர் மோகன் பாபுவின் வித்யா நிகேதன் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அங்கு நடிகர் மோகன் பாபு நடத்தி வரக்கூடிய கல்லூரியில் நிர்வாக செயல்பாட்டை பார்வையிட்டார். நடிகர் மோகன் பாபு கல்லூரியின் வளர்ச்சிகள் குறித்து தனது நீண்ட நாள் நண்பரான ரஜினிகாந்த்திற்கு அவரே சென்று அனைத்து இடங்களையும் சுற்றி காண்பித்து ஒவ்வொன்றாக விளக்கம் அளித்தார்.
பின்னர் அங்கிருந்த மாணவர்களுடன் ரஜினிகாந்த் பேசி அங்குள்ள சாய்பாபா கோயிலில் பூஜை செய்தார். பின்னர் இருவரும் பல மணி நேரம் தங்களது பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். இந்த சந்திப்பின் காணொளி தற்பொழுது வெளியாகி உள்ளது. நடிகர் மோகன் பாபு பாஜக தலைமையுடன் நெருங்கி இருந்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்தை பாஜகவில் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்த சந்திப்பின்போது நடிகர் மோகன் பாபு ரஜினிகாந்த்திடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ரஜினிகாந்த் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும் நடிகர் மோகன் பாபு ரஜினிகாந்த் சந்தித்த காணொளி வெளியான நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கும் விதமாக வியூகம் வகுத்து வரக்கூடிய நிலையில் ரஜினிகாந்த் மோகன் பாபு சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *