சினிமாவில் அட்ஜெஸ்மண்ட் பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை!

top-news
FREE WEBSITE AD

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகமாக லாபம் சம்பாதித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடித்த எல்லா நடிகர்களும் நடிகைகளும் இப்போது பிரபலமாகிவிட்டார்கள். நடிகை சிம்ரனுக்கு இந்த திரைப்படம் கம்பேக் கொடுத்திருக்கிறது. அதேபோல இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த யோகலட்சுமிக்கு அறிமுகமே தேவையில்லை.

நடிகை யோகலட்சுமி தான் இப்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் யோகலட்சுமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசி இருக்கிறார். அதில் யோகலட்சுமி பேசும்போது, சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய நடத்தையும் நம்மை நோக்கி கீழே வரும் கேள்விகளுக்கு நம்முடைய தைரியமான பதில்கள்தான் மிக முக்கியமானவை.

சிலர் தவறாக கேட்பது போன்ற நிலைமை வந்துவிட்டாலும் நாம் அதற்கு எப்படி ரியாக்ஷன் செய்கிறோம் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது அவங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் வேண்டும் என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் அந்த முடிவில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும், அதுதான் முக்கியமானது. சினிமாவில் அட்ஜஸ்மென்ட் கேட்டு தொந்தரவுகள் வரதான் செய்யும். ஆனால் நம்முடைய பதில்கள் அவர்களுக்கு பயம் கொடுப்பதாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

இது சினிமாவில் மட்டும் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் நடக்கவில்லை, எல்லாத்துறையிலும் நடக்கிறது. எல்லா இடத்திலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று யோக லட்சுமி பேசியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு சோசியல் மீடியாவில் பாராட்டை பற்றி வருகிறது. ஏற்கனவே சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து பலரும் பேசுகிறார்கள். இந்த நிலையில் சினிமாவில் இப்போதுதான் அறிமுகம் ஆகி இருக்கும் யோகலட்சுமியும் தைரியமாக பேசியிருக்கிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *