7 டன் அரிசியைக் கடத்திய இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 25 Jun, 2025
ஜூன் 25,
கடல்வழியாக 7 டன் அரிசியைக் கடத்த முயன்ற இருவரைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையமான MARITIM அதிகாரிகள் கைது செய்தனர். தாவாவ் கடல் எல்லை பகுதிகளில் ரோந்து பணியிலிருந்த MARITIM அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய மீன்பிடி படகைச் சோதனையிட்டதில் படகில் 7000 கிலோ உள்ளூர் பச்சரிசிகளும் 510 கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டதாகத் தாவாவ் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Kepten Ariffin Ghazali தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட படகு மலேசியாவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட இருவரில் 20 வயது உள்ளூர் ஆடவர் படகின் உரிமையாளர் என கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மற்றோர் ஆடவர் இந்தோனேசிய ஆடவர் என்றும் தெரிய வந்துள்ளதாக தாவாவ் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Kepten Ariffin Ghazali தெரிவித்தார். அரசு மானிய விலை பொருள்களை வெளிநாட்டுக் கடத்த முயற்சித்ததாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் மதிப்பு RM300,000 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் தாவாவ் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Kepten Ariffin Ghazali தெரிவித்தார்.
Dua individu, termasuk seorang warga Indonesia, ditahan oleh pihak Maritim ketika cuba menyeludup 7 tan beras dan 510kg minyak masak bersubsidi melalui laut di perairan Tawau. Nilai rampasan dianggarkan berjumlah RM300,000.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *