வரலாறு படைத்தனர் பெர்லி-தினா ஜோடி!ஆண்கள் பிரிவிலும் மலேசியா வெற்றி!

- Muthu Kumar
- 19 May, 2025
கோலாலம்பூர், மே 19-
தாய்லாந்துப் பொதுப் பூப்பந்து வாகையாளர் போட்டி 41 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பிறகு மலேசியா முதன்முறையாக பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
உலகத் தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ள மலேசிய ஜோடியான பெர்லி டான்- எம்.
தினா ஆகியோர் தென் கொரியாவின் ஜியோங் நா நா இயூன்- லீ இயோன் ஊ இணையை ஐம்பத்தேழே நிமிடங்களில் 21-16, 21-17 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தனர்.
அவ்விரு ஜோடிகளிடையே போட்டி கடுமையாக இருந்தாலும், இறுதியில் பெர்லி டான்- தினா அபார வெற்றியைப் பதிவு செய்தனர்.பெர்லி டான்- தினா ஜோடி பரிசுத்தொகையாக 37,525 டாலர் ( 161,130 மலேசிய வெள்ளி) பெற்ற வேளையில், ஜியோங் - லீ ஜோடி 18,050 டாலர் (77,500 மலேசிய வெள்ளி) பெற்றனர்.
மலேசிய பூப்பந்து சங்கத்துடன் தொடர்ந்து நிலைத்திருப்பதா அல்லது தொழில்முறை ஆட்டக்காரர்களாக மாறுவதா என்பது குறித்து அந்த மலேசிய ஜோடி தீவிரமாக ஆலோசித்து வந்த வேளையில், அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அனைத்துலக நிலையில் பெர்லி-= தினாவுக்கு நான்காவது வெற்றியாகும். 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சுவீஸ் ஓப்பன். 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு ஓப்பன், 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹாங்காங் ஓப்பன் ஆகிய போட்டிகளிலும் அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
இதனிடையே, ஆண்களுக்கான தாய்லாந்து பொதுப் பூப்பந்து சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் மலேசிய ஜோடியான ஏரன் சியா- சோ ஊய் டென் மார்க்கின் வில்லியம் கிரிகர் போ- கிறிஸ்டியன் ஃபாஸ்ட் காயர் இணையை 20-22, 21-17,21-12 எனும் புள்ளிக் கணக்கில் வென்று வாகையாளர் பட்டத்தை வென்றனர். ஏரன் சியா-சோ ஜோடி முதன்முறையாக இவ்வாண்டில் இரண்டு பட்டங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த மார்ச் மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர்கள் வெற்றிபெற்றனர்.பெர்லி- தினா போன்று இந்த ஜோடியும் 37,525 டாலர் பரிசுத் தொகையை வென்றனர்.
Pasangan beregu wanita Malaysia, Pearly Tan-M. Thina raih kejuaraan sulung di Kejohanan Badminton Terbuka Thailand. Mereka dan pasangan lelaki Aaron Chia-Soh Wooi Yik masing-masing menang serta membawa pulang hadiah AS$37,525 setiap satu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *