அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறேன்- டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்!

- Muthu Kumar
- 02 Mar, 2025
ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக், அவதார், டெர்மினேட்டர் என பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.அத்துடன் ஆஸ்கர் விருதுகளை வென்றவர் என சாதனைக்கும் சொந்தக்காரர். ஜேம்ஸ் கேமரூன் கனடாவில் பிறந்து, தனது 17 வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.
இந்நிலையில், அவர் ஒரு பேட்டியொன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தை நாள்தோறும் பார்க்க விரும்பவில்லை, அமெரிக்காவை விட்டு வெளியேறி நியூசிலாந்தில் நிரந்தரமாக குடியேற போவதாக கூறியுள்ளார்.
இந்த பேட்டியில் அவர் ''அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது கொடூரமானது. டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா ஒழுக்கமான அனைத்து விஷயங்களில் இருந்தும் விலகுவதாக நான் பார்க்கிறேன். அமெரிக்கா எதனுடன் இணைந்திருக்கவில்லை என்றால், அது வரலாற்று ரீதியாக நிற்க முடியாமல் போய்விடும். இது மிக மோசமான யோசனையாக மாறிவிடும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் மேலும் கூறுகையில், ''தினந்தோறும் வரும் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் முழுமையாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்கிறேன். அதற்குக் காரணம், அது என்னை வேதனைப்பட வைக்கிறது. நியூசிலாந்து நாளிதழ்களில் சற்று வேறு மாதிரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *