வலுவான ஆதாரங்களை வைத்துள்ளோம்! உங்கள் சித்து விளையாட்டுகள் பலிக்காது! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

(லாவண்யா ரவிச்சந்திரன் - இஷாந்தினி தமிழரசன்)

 

கேஎல் லாருட் நிறுவனம் தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில் அவரது  60 விழுக்காடு பெரும்பான்மை பங்குகளோடு வெற்றிகரமாக இயங்கி வருகிறது கே.எல்.லாருட் நிறுவனம்.

 

இந்நிலையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் சிலர் செய்யும் சித்து விளையாட்டுகளுக்குப் பலியாகி, கே.எல் லாருட் நிறுவனம் குறித்து

போலிசில் புகார் செய்துள்ளார் அதன் பங்குதாரர் என்று சொல்லிக்கொள்ளும் ஹாஜி முஹம்மத் ஜைன் பின் கஸ்ஸாலி.

 

கேஎல் லாருட் நிறுவனம் ஈய மண் தோண்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கீழ்  மற்றொரு நிறுவனம் ஒன்றும் தொடங்கப்பட்டிருப்பது நிறுவன இயக்குநர்களுக்கு தெரியாமல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிரார் ஹாஜி முஹமத்.

 

இதற்கு பதிலளித்த கே.எல்.லாருட்டின் தலைமை இயக்குநர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கேஎல்‌ லாருட்டில்‌ இருந்த இயக்குநர்களின்‌ நிர்வாகத்தில்‌ எந்தவொரு: மேம்பாடும்‌ வளர்ச்சியும்‌ நிறுவனம்‌ அடையவில்லை. ஆனால்,  கேஎல்‌ லாருட் ‌ஹோல்டிங்ஸ்‌ மூலம்‌

ஈயம்‌ தோண்டும்‌ நிறுவனங்களில்‌ 4.5 மதிப்பீடு பெற்ற நிறுவனமாக அங்கீகாரம் பெற்றது.

ஈயம்‌ தோண்டக்கூடிய நிறுவனமான கே எல் லாருட்‌ 2008இல்‌  கைவிடப்பட்டு யாராலும்‌. எடுத்து நடத்த முடியாத சூழ்நிலையில்‌, தம்மிடம் வந்ததாக ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.

பல போராட்டாங்களுக்கு இடையில்‌:இந்நிறுவனத்தை நடத்தி 6௦ விழுக்காடு பங்குதாரராக தானும்‌ சீனர்கள்‌ மற்றும்

மலாய்க்காரர்‌ 4௦ விழுக்காடு பங்குதாரராகவும் இருந்தனர் என்று அவர் கூறினார்.


இந்நாள்‌ வரை என்னுடைய பார்வையில்தான்‌ இதனை கட்டுக்கோப்பாக வைத்திருந்தோம்‌. ஆரம்பத்தில்‌ இது சார்ந்த அனுபவம்‌: எனக்கு இல்லை. அதன்‌ காரணமாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம்‌ இந்தப்‌ பொறுப்பை வழங்கினோம்‌. ஆனால்‌, எதுவும்‌ சரியாக நடக்கவில்லை. இது சார்ந்து பல கேள்விகளும்‌ பிரச்சினைகளும்‌. எழுந்து கொண்டே இருந்தது.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக பல. வழக்குகள்‌ பதிவு செய்து, அத்தனையிலும்‌ தோற்றுதான்‌ போனார்கள்‌. இவர்கள்‌ யாரும்‌. நிறுவனத்தின்‌ வளர்ச்சிக்குக்‌ கை கொடுத்து பல. விஷயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காததால்‌, புது இயக்குநர்கள்‌ நியமனம்‌ செய்ய வேண்டும்‌ என்பதற்கு மறுப்புத் தெரிவித்து அதற்கும்‌ வழக்குத் தொடுத்தார்கள்‌.

இதற்கு மறுப்புத் தெரிவித்த அவர்களின்‌ வழக்குகளைப்‌. பொருட்படுத்தாது. இன்று 100 விழுக்காடு நிறுவனத்தை நடத்தக்கூடிய பொறுப்பு எங்களிடம்‌ உள்ளது. அதில்‌ ஒன்றுதான்‌ ஹாஜி முகமட்‌ சேய்ன்‌ பின்‌ காசாலி 14 விழுக்காடு, லியோங்‌. சகோதரர்களான வியோங்‌ கோக்‌ சென்‌,  வியோங்‌ ஹொங் சிம்‌  தத்தம் 13 விழுக்காடு வைத்துள்ளனர்‌.

இந்நிலையில், எஸ்பி கேர்‌ கொன்சால்டன்‌ நிறுவனம்‌ நம்முடன்‌ நெருக்கமாக இருந்தார்கள்‌.  கூட்டுத்‌ தொழில்‌ போல்‌ செய்வதற்கு. நீங்கள்‌ முதலீடு செய்யுங்கள்‌ என்று சொன்னதால்‌ 11 லட்சம்‌ வெள்ளியை நாங்கள்‌. முதலீடு செய்தோம்‌. ஆனால்‌, எங்களுடன்‌ சேர்ந்து முதலீடு செய்ய வேண்டும்‌ என்ற எண்ணம்‌ அவருக்குக்‌ கிடையாது.

இந்தப்‌ பணம்‌ மூலம்‌ எந்த முதலீடும்‌ செய்யாததால்‌, கேஎல்‌ லாருட்‌, எஸ்பி கேர்‌ இடையே பிரச்சினை நிலவிக்‌ கொண்டிருக்கிறது. வரும்‌திங்கள்கிழமை அன்று அவர்கள்‌ தற்காப்பு வாதத்‌ தொகுப்பு பதிவு செய்ய வேண்டும்‌.. ஆனால்,  அவர்களால்‌ அதைச் செய்யவும்‌ முடியாது. செக்‌ மூலம்‌ முதலீடு செய்ததற்கான ஆதாரம்‌ எங்களிடம்‌ உள்ளது என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.

கேஎல்‌ லாருட்‌, கேல்‌ லாருட்‌ ஹோல்டிங்ஸ்‌, அன்வாருக்கும்‌ ஓம்ஸ்க்கும்‌ உடனான தொடர்பு பற்றி பேச வேண்டும்‌ என்று வேறு கூறிக்கொண்டிருக்கிறார்கள்‌. ஏதோ ஓர் உள்நோக்கம், யாருக்கோ வயிற்றெரிச்சல், எனவே எப்படியாவது ஓம்ஸ் தியாகராஜனின் முன்னேற்றத்தைச் சிதைக்க வேண்டுமெ என சித்து விளையாட்டுக் காட்டுகிறார்கள். எனவே, புதிய கதைகளை உருவாக்கி உலவ விடுகிறார்கள்.

அப்படி ஒரு சிறப்பம்சம் கொண்ட திரைக்கதைதான் ஓம்ஸ் பா.தியாகராஜன் மிரட்டினார் என்று புகார் செய்திருப்பது.

பாவம் அவர்களின் சித்துவிளையாட்டுகள் ஒன்றும் பலிக்கப்போவதில்லை. காரணம் வலுவான ஆதாரங்கள் எங்களிடம் தெளிவாகவே உள்ளன என்கிறார் ஓம்ஸ் பா.தியாகராஜன்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *