அனுமதியின்றி சாலையோர மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றம்!

- Muthu Kumar
- 26 Jun, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், ஜூன் 26-
அனுமதியின்றி இங்கு ஜாலான் அலாம்ஷா (ஜாலான் மோரிப்) மற்றும் கஞ்சோங் டாராட் சாலையோர மின் கம்பங்களிலும் மரங்களிலும் பொருத்தப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அறிவிப்பு அறிக்கைகளை கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் விளம்பரப் பகுதி அமலாக்க அதிகாரிகள் அங்கிருந்து அகற்றி அப்புறப்படுத்தினர்.
2007 ஆம் ஆண்டின் நகராண்மைக் கழகச் சட்டம் பிரிவு 21 (2) இன் கீழ் அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் இறங்கியதாக அமலாக்கப் பிரிவின் உயர் அதிகாரி ரம்லி ரஹிம் தெரிவித்தார். இவ்வட்டாரத்தில் வியாபார நோக்கத்திற்காகப் பொருத்தப்படும் விளம்பரப் பதாகைகளுக்கு அதன் உரிமையாளர்கள் முன் கூட்டியே அதற்கான அனுமதியை நகராண்மைக் கழகத்தின் விளம்பரப் பிரிவினரிடம் பெற்றிருப்பது அவசியம் என்பதால் சட்ட விரோதமாகப் பொருத்தப்படும் பதாகைகள் விளம்பர அட்டைகள் அகற்றப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
சாலையோரங்களில் பொருத்தி வைக்கப்படும் பதாகைகள் உறுதித் தன்மை இல்லாமல் இருப்பின் கடுமையான காற்றின் காரணமாக சாலைகளில் பயணிக்கும் வாகனமோட்டிகளுக்கு பின்னர் அதுவே பாதகமாகப் போய் முடியும் என்பதால் வியாபார நோக்கத்திற்காக இங்கு வைக்கப்படும் பதாகைகள் அமைப்பு குறித்து நகராண்மைக் கழகத்திடம் அதன் உரிமையாளர்கள் அறிவிப்பதோடு முறையான அனுமதியும் பெற்றிருப்பது அவசியம் என்று ரம்லி தெரிவித்தார்.
Pihak berkuasa Majlis Perbandaran Kuala Langat telah menanggalkan sepanduk iklan tanpa kebenaran di Jalan Morib dan Kanchong Darat. Sepanduk ini boleh membahayakan pengguna jalan, justeru peniaga diingatkan mendapatkan kelulusan sebelum memasangnya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *