தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தி திரைப்படம் தான் தேரே இஷ்க் மெய்ன்!

top-news
FREE WEBSITE AD

தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தி திரைப்படம் தான் தேரே இஷ்க் மெய்ன் . பான் இந்திய அளவில் உருவாக இருக்கும் இந்த படத்தினை பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார்

ஏற்கனவே தனுஷ், ஆனந்த் எல் ராய் கூட்டணி ரஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்களில் இணைந்திருந்தது. தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து கிரித்தி சனோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு முதல் பாதியில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் தான் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கலர் எல்லோ ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்று (ஜனவரி 28) தேரே இஷ்க் மெய்ன் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது. எனவே இந்த அறிவிப்பு இந்த படத்தின் கதாநாயகி குறித்து அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *