ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டல (JS-SEZ) வளர்ச்சி!
- Muthu Kumar
- 13 Nov, 2024
ஜொகூர் பாரு, நவ.13-
ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி, ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டல (JS-SEZ) வளர்ச்சி குறித்து முக்கியக் கொள்கைகளைப் பற்றி விவாதிக்க கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்திற்கு இரண்டாம் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஹாஜி ஃபடில்லா யூசுப் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தின் நோக்கம் பொருளாதாரப் பகுதி வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய கொள்கைகளை விரிவாக விவரித்து, செயல்பாடுகள் நேரத்திற்கேற்ப நடைபெறுவதை உறுதிசெய்வதாகும். முக்கியமான விவாதத்திற்குள் தற்போது மற்றும் எதிர்கால அபிவிருத்தி, முக்கியத் துறைகள், JS-SEZ இல் முன்னேற்றம் காணக் கூடிய பகுதிகள், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் சிறப்பு தன்மைகள் போன்றவை அடங்கும் என ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
மாநில அரசு, JS-SEZ மூலம் எல்லை கடந்த வர்த்தகத்தின் ஊடாக பொருளாதார வளர்ச்சி மேம்படவும், உயர்ந்த சம்பள வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஜொகூர் மற்றும் மலேசியாவிற்கே முதலீடுகளை ஈர்க்கவும் இந்நிரலில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது என்றார்.இந்த பொருளாதார வளர்ச்சி முழுமையாக ஜொகூர் மக்களுக்கு நன்மை பயக்கும் எனும் நம்பிக்கையுடன் 2030 ஆம் ஆண்டுக்குள் ஜொகூர் மாநிலத்தை ஒரு முன்னேற்றம் வாய்ந்த மாநிலமாக மாற்றும் கனவை உண்மையாக்கும் நோக்கத்துடன் இருக்கும் எனக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பொருளாதார அமைச்சரான ரஃபிஸி பின் ரம்லி, துணை நிதி அமைச்சு அமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஜான், பொருளாதாரத் துணை அமைச்சர் டத்தோ ஹாஜா ஹனிபா ஹஜார் தாயிப், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை துணை அமைச்சர் லியூ சின் டொங், ஜொகூர் மாநில முதலீடு, வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மனித வள ஆணைய தலைவர் லீ டிங் ஹான், மாநில மற்றும் கூட்டாட்சி அரசுத் துறைகளின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை இயக்குநர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *