சரத்குமார், சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

சரத்குமார், சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.அதே சமயம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சகாப்தம், மதுரவீரன் ஆகிய படங்களுக்கு பிறகு படை தலைவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து கொம்பு சீவி எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் காளி வெங்கட், தாமிகா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

பாலசுப்பிரமணியம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படமானது மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டி கடந்த 1996 இல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட காணொளி இன்று (ஏப்ரல் 6) மாலை 7.30 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *