மரியாதைக்காகவே நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம்-ஜி வி பிரகாஷ்!

top-news
FREE WEBSITE AD

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் சாம் ஆண்டோ இயக்கத்தில் வெளியான டார்லிங் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளராக ஜி.வி-யை ஏற்றுக்கொண்ட மக்கள் நடிகராகவும் ஏற்றுக்கொண்டனர். அதனை தொடந்து இவரது நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.  இதனிடையே கடந்த 2013-ம் ஆண்டு பள்ளியில் இருந்தே தான் காதலித்து வந்த பாடகி சைந்தவியை திருமணம் செய்துக்கொண்டார் ஜி.வி.

இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனதற்கு அவர்களின் நிஜ வாழ்க்கையில் உள்ள காதலும் ஒரு காரணம் என்றும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக தகவல்கள் கிசுகிசுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவு செய்ததாக அறிவித்தனர். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் விவாகரத்திற்கு பிறகும் பாடகி சைந்தவி உடன் இசைக் கச்சேரிகளில் பாடுவது, படத்தில் பாடுவது என இணைந்து பணியாற்றி வருகிறார் ஜி.வி. இதுகுறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் சமீபத்தில் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், நாங்கள் இருவருமே மிகவும் தொழில் சார்ந்து யோசிக்கக்கூடியவர்கள். மேலும் ஒருவருக்கொருவர் மீது மரியாதை அதிகமாக இருக்கிறது. அந்த மரியாதைக்காகவே நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *