வெ1,000 கோடி வரி வசூலிப்பை எஸ்எஸ்டி விலக்கு பாதிக்காது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 30-

சில பொருள்களுக்கான விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) விலக்கின் விரிவாக்கம், ஓராண்டில் 1,000 கோடி வெள்ளி வரையில் வரியை வசூலிக்கும் அரசாங்கத்தின் இலக்கை பாதிக்கச் செய்யாது என்று. பொருளாதார நிபுணர் கூறியுள்ளார்.

நாட்டின் நிதி ஆற்றல் பாதிக்கப்படாமல், மக்களின் சுமையைக் குறைப்பதில் ஈடுபடுவதுடன் இத்துறையில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறியும் போக்கை அரசாங்கம் கொண்டிருப்பதாக, ஜெஃப்ரி வில்லியம்ஸ் தெரிவித்தார்.

“வருமானத்தைக் காட்டிலும் இந்த விலக்களிப்பு மிகச் சிறியதுதான்.இந்த வரி விலக்கு நாட்டின் ஒட்டுமொத்த வரி வசூலிப்பையும் பாதிக்கச் செய்யாது. “இவ்வாண்டின் இறுதி ஆறு மாதங்களில் 500 கோடி வெள்ளி வரி வசூலிப்பு இலக்கை அரசாங்கம் நிச்சயம் அடையும் என்றும் அடுத்த ஆண்டுக்கு இலக்கிடப்பட்டிருக்கும் 1,000 கோடி வெள்ளி வசூலிப்பை அது அடைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது' என்று  அவர் தெரிவித்தார்.

அதோடு, பண வீக்கத்தையும் பயனீட்டாளர் செலவினத்தையும் கட்டுப்படுத்தவும் இந்த வரி விலக்கு உதவும் என்று ஜெஃப்ரி கூறினார்.
மெண்டரின் ஆரஞ்சு, ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பேரீச்சை ஆகிய இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.அதோடு, சிகை அலங்காரம், நகங்கள் மற்றும் முக சிகிச்சை போன்ற ஒப்பனை சேவைக்கான சேவை வரியை விரிவுப்படுத்தப் போவதில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரி விதிப்பினால் பாதிக்கப்படவிருக்கும் சிறு வர்த்தகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, குத்தகை அல்லது வாடகை மற்றும் நிதிச் சேவைக்கான சேவை வரிப் பதிவின் விரிவாக்கம் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வெள்ளி வரை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் நிதி அமைச்சு அறிவித்திருந்தது.

பயனீட்டாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல், தேசிய வருமான அதிகரிப்பு மற்றும் அடிப்படை சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புச் சேவையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் நீண்ட கால இலக்கிற்கு ஏற்ப இந்த வரி விலக்கு அமைந்திருக்கிறது என்று ஜெஃப்ரி கூறினார்.

Pengecualian cukai jualan dan perkhidmatan (SST) bagi barangan tertentu tidak jejaskan sasaran kutipan RM1 bilion setahun kerajaan. Ia bantu kawal inflasi dan beban pengguna. Kerajaan tetap komited tingkat hasil negara tanpa ganggu kebajikan rakyat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *