வெட்டு ஒன்று; கன்று நூறு! - இயற்கையின் மீதான பிரதமரின் அக்கறையைப் போற்றுவோம்!

top-news
FREE WEBSITE AD


 

அண்மையில் கோலாலம்பூரில் பெய்த கன மழையால் பல மரங்கள் சரிந்து விழுந்ததோடு, உயிரிழப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தலைநகரில் ஆபத்தான நிலையில்  உள்ள பழமையான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

 

இந்நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

ஒரு மரத்தை வெட்டினால் அதற்குப் பதிலாக 100 மரங்களை நடவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கோலாலம்பூர் மேயருக்கு அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

 

பிரதமரின் இந்தச் செயல் பூமியின் மீதும், இயற்கையின் மீதும், நாளைய நம் தலைமுறையினர் மீதும் அவர் வைத்திருக்கும் அக்கறையைக் காட்டுகிறது என்று ஓம்ஸ் பா.தியாகராஜனின் புதல்வரும், மலர் டிவியின் தலைமை நிர்வாகியுமான டாக்டர் பழனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

இயற்கையை அதன் தன்மையோடு கட்டிக் காக்க வேண்டியது நமது கடமை. தேவையில்லாமல் இயற்கை வளங்களை அழித்தால், இயற்கையின் சீற்றம் இன்னும் கொடூரம் ஆகலாம். எனவே, இயற்கையை எந்த அளவுக்குப் பாதுகாக்க முடியுமோ அந்த அளவுக்கு நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். அந்த வகையில் நமது பிரதமரின் இந்த நடவடிக்கை போற்றுதலுக்குரியது. இயற்கையின் எந்த இழப்பையும் நாம் ஈடுகட்ட வேண்டும் என அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

 

பூமித் தாயின் கோபத்திற்கு ஆளாகாமல், கைமாறாக ஒன்றுக்கு நூறு என மரங்களை நடவேண்டும் என்கிற உத்தரவு நகராண்மைக் கழகத்திற்கு மட்டும் அல்ல, நமக்கும் சேர்த்துதான் நமது பிரதமர் உணர்த்தியிருக்கிறார். எனவே, பிரதமரின் இந்த உத்தரவை நாமும் பின்பற்றுவோம். இயற்கையை நேசிப்போம். பசுமையான இந்த தேசத்தை மேலும் பசுமையாக்குவோம் என்று டாக்டர் பழனீஸ்வரன் தெரிவித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *