ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு இலவச டேப்லெட்!

top-news
FREE WEBSITE AD


மத்திய அரசு, கல்வி அமைச்சின் மூலம், டிஜிட்டல் கல்வி உத்திகளில் புரட்சியை ஏற்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு டேப்லெட் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

 டிஜிட்டல் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் கல்வி அமைச்சு ஈடுபட்டுள்ளது, மேலும் டேப்லெட் பயன்பாடு ஆசிரியர்களுக்கு என்று மட்டும் இல்லாமல் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

நிதிக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், நாடு முழுவதும் மாணவர்களுக்கு டேப்லெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது கட்டம் கட்டமாகச் செய்யப்படலாம் என்று விளக்கிய அவர், கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்ட அனைத்து திட்டங்களையும் தாம் ஆதரிப்பேன் என்று கூறினார்..

 இதற்கிடையில், 'ஒரு மாணவர், ஒரு டேப்லெட்' முன்முயற்சி இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்குள் கேஜெட்கள் இணைக்கப்பட்டுவிடும் என்று அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் கல்வி முறையை மேம்படுத்தும் வகையில் கேட்ஜெட்களை வாங்குவதற்கு கூடுதல் பட்ஜெட்டை பெற் தாம் உதவுவதாக ஸாஹிட் உறுதியளித்ததோடு, ஒவ்வொரு மாணவரும் ஒரு கேஜெட்டைப் பயன்படுத்த வேண்டும் என்பது அமைச்சின் விருப்பமாகும் என்று கூறினார்.

இதற்கிடையில், கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் ஸாஹிட், நாடு முழுவதும் குறைந்த அடர்த்தி உள்ள பகுதிகளில் 5G செயற்கைக்கோள் இணையத்தை நிறுவுவதில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த ஆண்டின் இறுதிக்குள் கிராமப்புற மாணவர்கள் சிறந்த இணைய இணைப்பை அனுபவிப்பார்கள் என்று உறுதியளித்தார்.

இன்டர்நெட் இணைப்பைப் பெறுவதற்காக மரங்களில் ஏறும் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் நிலைமை மேம்படும். மூன்றாவது 5G நெட்வொர்க் வழங்குநர் குறைந்த அடர்த்தி உள்ள பகுதிகளில், குறிப்பாக ஃபெல்டா திட்டங்கள், பாரம்பரிய கிராமங்கள் மற்றும் இணைய இணைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவார் என்று அவர் கூறினார்.

"தற்போது, நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட அதிக அடர்த்தியான பகுதிகளில் இணைய கவரேஜ் 87.5 சதவீதத்தை எட்டியுள்ளது, இப்போது இரண்டாம் கட்டத்தின் கீழ், பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் குறைந்த அடர்த்தி உள்ள பகுதிகளில் கவனம் செலுத்தப்படும்," என்று அவர் கூறினார்.

முன்னதாக தனது உரையில் ஜாஹிட், வேகமாக நகரும் மற்றும் சவாலான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றார்.

நாட்டில் உள்ள 8,106 பள்ளி கணினி ஆய்வகங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த கல்வி அமைச்சு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குவாந்தானில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக், துணை அமைச்சர் வோங் கா வோ மற்றும் பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் ஆகியோரும் உடனிருந்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *