13 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர் எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புதிய இணைக் கட்டடம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26-

புதிய இணைக் கட்டடத்தைப் பயன்படுத்துவதற்காக கடந்த 13 ஆண்டுகாலமாக காத்திருந்த சிலாங்கூர். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கனவு நனவாகியது.

அப்பள்ளிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றும்,அனைத்து பள்ளிகளையும் பாதுகாப்பதே மடானி அரசாங்கத்தின் முதன்மை கொள்கையாகும் என்றும் கல்வி துணைய மைச்சர் வோங் கா வோ குறிப்பிட்டார்.

“தேசியப் பள்ளிகளும் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளும் நமது அரசாங்கத்தின் கீழ் கல்வியின் ஒரு பகுதியாகும்.கல்வி அமைச்சரும் நடப்பு அரசாங்கமும் இந்த உறுதிப்பாட்டை அளித்துள்ளனர். நாட்டின் கல்வித் தரத்திற்கு முக்கிய உத்தரவாதத்தின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளது," என்றார் அவர்.நேற்று பள்ளியின் புதிய கட்டடத்தை வோங் கா வோ திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து பள்ளியைப் பார்வையிட்ட வோங், பழைய கட்டடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் பழுது பார்ப்புப் பணிகளுக்காக
70,000 ரிங்கிட் உதவி நிதி வழங்குவதாகவும்
உறுதியளித்தார். தமிழ்ப்பள்ளிகளுக்காக
முன்னாள் பிரதமரால் ஒதுக்கப்பட்ட சிறப்பு மானியத்தின் கீழ், கடந்த 2014ஆம் ஆண்டு, எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புதிய இணைக் கட்டடத்திற்கான கட்டுமானப் பணி தொடங்கியது.

கடந்த 2018ஆம் ஆண்டே 95 விழுக்காட்டு வேலைகள் பூர்த்தியடைந்த நிலையில், நிலப்பிரச்சினை காரணமாக இதர ஐந்து விழுக்காட்டுப் பணிகள் நிலுவையில் இருந்ததாக பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் தனபாலன் குப்புசாமி தெரிவித்தார். "2015 முதல் 2018ஆம் ஆண்டு வரையில் பள்ளியின் நில உரிமை பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம்.

அதையடுத்து 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் சிசிசி எனப்படும் மாநகர் மன்ற அனுமதி சான்றிதழிலிலும் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தது. இந்த அனைத்து பிரச்சினைகளும் மடானி அரசாங்கத்தின் உதவியால் தற்போது களையப்பட்டுள்ளன," என்று தனபாலன் குப்புசாமி தெரிவித்தார்.இப்புதிய கட்டடம் எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தரத்தை மேம்படுத்துவதுடன் ஆசிரியருக்கும் மாணவருக்கும் வசதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக தனபாலன் கூறினார்.

Sekolah Tamil Ladang Eppingham akhirnya dapat menggunakan bangunan baharu selepas 13 tahun menunggu. Masalah hak milik tanah dan kelulusan CCC diselesaikan dengan bantuan kerajaan MADANI. Kemudahan ini dijangka meningkatkan kualiti pembelajaran dan pengajaran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *