எனக்கு அளித்த அன்பில் 50 சதவீதத்தை கொடுத்தால் அதுவே போதும்- ஷாருக்கான்!

- Muthu Kumar
- 05 Feb, 2025
இயக்குநராக தனது திரையுலகில் தனது பயணத்தை தொடங்கும் எனது மகனும், நடிகையாக அறிமுகமாக உள்ள எனது மகளும், நீங்கள் எனக்கு அளித்த அன்பில் 50 சதவீதத்தை பெற்றால் அதுவே எனக்கு போதும்" என நடிகர் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் 'The Ba***ds of Bollywood' என்ற இணையத் தொடர் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த தொடரை ஷாருக்கான் தயாரிக்கிறார். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகிறது.
அதற்கான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் ஷாருக்கான், "6 அத்தியாயங்கள் கொண்டதாக ஆர்யன் கான் ஒரு தொடரை இயக்கி வருகிறார். பாலிவுட் திரையுலகில் நுழைய விரும்பும் நபரின் வாழ்க்கை அவர்கள் சந்திக்கும் சிக்கல் குறித்து நெட்பிளிக்ஸ் தொடர் தயாராகி வருகிறது.
நான் அந்த தொடரின் சில பகுதிகளை பார்த்தேன். நகைச்சுவையாக இருந்தது. நீங்களும் உங்களது ஆதரவை இந்த தொடருக்கு கொடுக்க வேண்டும். இயக்குநராக தனது திரையுலகில் தனது பயணத்தை தொடங்கும் எனது மகனும், நடிகையாக அறிமுகமாக உள்ள எனது மகளும், நீங்கள் எனக்கு அளித்த அன்பில் 50 சதவீதத்தை பெற்றால் அதுவே எனக்கு போதும்" என உருக்கமாக பேசியுள்ளார்.இந்த தொடரில் ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர்கபூர், பாபி தியோல் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *