மலேசியாவில் கூகுளின் முதலீடு விரைவில் அறிவிக்கப்படும்
- Lava Ravi
- 08 May, 2024
கோலாலம்பூர், மே 8-
மலேசியாவில் கூகுள் முதலீடு செய்வது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சு உறுதி செய்துள்ளது.
கூகுளின் தலைவரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான ரூத் போரட், தொழில்நுட்பத்தின் பல மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்திய சந்திப்பின் தொடர்ச்சியாக இது இருப்பதாக அதன் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் கூறினார்.
இந்த இணையதள சந்திப்பில் இலக்குமுறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் நானும் கலந்துகொண்டோம். இந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
விவாதிக்கப்பட்ட மற்ற விஷயங்களில் நிபுணத்துவ பரிமாற்றம், மலேசியர்களின் ‘மறுதிறன் மற்றும் மேம்பாடு’ ஆகிய மூன்று துறைகளில் குறிப்பாக கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகியவை அடங்கும் என்று தெங்கு ஜஃப்ருல் கூறினார்.
டிஜிட்டல் அமைச்சு செயற்கை நுண்ணறிவின் டிஜிட்டல் பயன்பாட்டை ஒருங்கிணைக்கும், முதலீட்டைப் பொறுத்தவரை, மித்தி, மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இணைந்து கூகுளுடன் இறுதி தயாரிப்புகளை செய்து வருகின்றன என்றார்.
இந்த அமர்வின் போது, மலேசிய அரசாங்கத்தின் நோக்கம், கவனம் குறித்து பிரதமரின் முந்தைய விளக்கத்தின் அடிப்படையில் மலேசியாவில் விரிவாக்கக்கூடிய பகுதிகளின் செயல் திட்டத்தின் முன்னேற்றத்தை ரூத் தெரிவித்தார்.
நவம்பர் 2023 இல், மலேசிய அரசாங்கமும் கூகுளும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகமான மலேசியர்கள், உள்ளூர் நிறுவனங்களுக்கு உள்ளடக்கிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு முதன்மை கூட்டாண்மையை அறிவித்தன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *