சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வெளியான தண்டேல்!

- Muthu Kumar
- 09 Feb, 2025
சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வெளியான தண்டேல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான திரைப்படம் அமரன். உண்மை கதை என்றாலும் அப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது சாய் பல்லவியின் நடிப்பு தான். இதை தொடர்ந்து பெரும்பாலும் சாய் பல்லவி ஒரு படத்தின் லக்கியாக அறியப்பட்டார்.அந்த வகையில் நாக சைதன்யாவுடன் அவர் இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. சந்து மொண்ட்டட்டி இயக்கத்தில் இப்படம் வெளியாக பிரித்விராஜ், கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மீனவனான நாக சைதன்யா கடைசியாக ஒரு பயணம் மேற்கொள்ள அவர் எல்லையை தாண்டி பாகிஸ்தான் ஆர்மியிடம் சிக்கிக்கொள்ள அவரினை மீட்க காதலியான சாய் பல்லவி போராடுகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் நேற்று வெளியானது.
ஏற்கனவே விடாமுயற்சி உலகளாவில் திரையரங்குகளில் வெளியானதால், தண்டேல் திரைப்படத்திற்கு கம்மியான திரையரங்குகளே கிடைத்தது. இதனால் பெரிய அளவில் வசூல் எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் 60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் முதல் நாளில் நல்ல வசூலை தட்டி இருக்கிறது.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பு 9.5 கோடி ரூபாய் வசூலும், இந்தி வெர்ஷன் 15 லட்சமும் தமிழில் 5 லட்சமும் வசூலித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் தண்டேல் திரைப்படம் 16 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *