பேரனின் படிப்பை நிறுத்திய தனுஷ்- உண்மையை கூறிய கஸ்தூரி ராஜா!

top-news
FREE WEBSITE AD

தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முகத் திறமையை வளர்த்துள்ளார்.இவர் முதன்முதலில் எடுத்த பவர் பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் இயக்குநர் அந்தஸ்தை சீக்கிரமாகவே எட்டிவிட்டார். தொடர்ந்து இவர் இயக்கிய ராயன் படம் வன்முறையே அதிகமாக இருந்ததாக விமர்சனம் எழுந்தது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் தனுஷ் நல்ல படம் உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இதையடுத்து அவர் எடுத்த படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இளம் பட்டாளங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கினார். படத்தில் உருவான கோல்டன் ஸ்பேரோ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாரயன் ஹீரோவாக களமிறங்கினார். மலையாள இளம் நடிகர்களான மேத்யூ தாமஸ், அனிகா, பிரியா வாரியர் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஆனால் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. படத்தின் கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதை சொதப்பியது. 15 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த படம், 10 கோடி ரூபாய் வசூலை கூட தாண்டவில்லை.
அதுமட்டுமல்லாமல், இந்த படத்துடன் வெளியான டிராகன் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. ஒருவேளை டிராகனுடன் ரிலீஸ் ஆகாமல் இருந்திருந்தால் நிலவுக்கு என் மீது என்னடி கோபம் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் என பேச்சும் அடிபடுகிறது.

இந்த நிலையில் படவிழா ஒன்றில் பங்கேற்ற தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா, என் பேரன் பவிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவன் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். நன்றாக படிக்கக்கூடிய பையன், அவனுடைய படிப்பை நிறுத்திவிட்டு தனுஷ், நடிக்க அழைத்து சென்றுவிட்டார் என கூறினார்.

கஸ்தூரி ராஜாவின் இந்த பேச்சு ரசிகர்களை முணுமுணுக்கவைத்துள்ளது. படிப்பை நிறுத்திவிட்டு நடிக்க அழைத்து சென்ற தனுஷ்க்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *