எது எனக்கு ரொம்ப பிடிக்குமோ அது என்னை விட்டுச் சென்று விடும்-ஏ ஆர் ரஹ்மான்!

- Muthu Kumar
- 10 Jan, 2025
சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள்குறித்து எமோஷனலாகப் பேசி இருக்கிறார். நான் இளமையாக எப்போதும் இருப்பதற்கு காரணம் என்னுடைய இசை தான். எனக்கு இப்போ 70 வயது கடந்து விட்டது.
ஆனால் நான் இப்போது தாத்தா மாதிரி இசையமைக்க முடியாது. இப்போது உள்ள இளைஞர்களும் என்னுடைய பாடல்களைக் கேட்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்றவாறு நான் இசை அமைக்க வேண்டும்.
அதனால் தான் நான் எப்போதும் இளமையாக இருக்கிறேன். அது மட்டுமில்லாமல் நாம் எப்போதும் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குற்ற உணர்வு, பொறாமை போன்ற கெட்ட சிந்தனைகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேலே ஆன்மீகம் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
நீங்கள் ஆன்மீகத்திற்குள் செல்லும்போது சுக துக்கங்களிலிருந்து எப்படி தள்ளி நிற்பது என்று உங்களுக்குத் தெரிந்து விடும். நான் இப்போ இருக்கிற மனநிலை எனக்குப் பல வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நான் அன்பை மட்டுமே தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று சின்ன வயதிலேயே முடிவு செய்து விட்டேன்.
நீங்கள் இதற்கு நேர் மாறான மனநிலையில் இருப்பதற்கு அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது. இந்த மனநிலை எனக்கு வருவதற்கு சின்ன வயதில் எனக்கு வந்த கஷ்டங்கள் தான் காரணம். முதலில் என்னுடைய அப்பா இறந்துபோனார்.அதற்குப் பிறகு என்னுடைய பாசமான பாட்டி இறந்து போனார். பிறகு நான் ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி இறந்து போய்விட்டது.
அப்போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது அது என்னவென்றால் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கையில் எனக்கு எது அதிகமாகப் பிடிக்கிறதோ அது என்னை விட்டுச் சென்று விடுகிறது.
சின்ன வயதிலிருந்து நான் என்னைவிட வயது மூத்தவர்களோடு பழகி இருக்கிறேன். அதனால் அவர்களின் முதிர்ச்சியான புரிதல் எனக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு கஷ்டத்தையும் கடவுள் எனக்குக் கொடுக்கும் பயிற்சியாக நினைக்கிறேன். என் வாழ்க்கைக்கு எது சரியோ அதையே அவர் செய்கிறார் என்றும் நான் நினைக்கிறேன் என்று அந்தப் பேட்டியில் ஏஆர் ரஹ்மான் கவலைபட பேசி இருக்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *