ஏழு ஆண்டுகளாக ஜானகி பாடாமல் இருப்பதன் பின்னணி என்ன?

top-news
FREE WEBSITE AD



தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் ஜானகி, 6 வயது குழந்தை, 60 வயது கிழவன் என தனது குரலில் வித்தியாசம் காட்டி பாடக்கூடிய திறமை கொண்டவர்.

வசீகர குரலின் மூலம் மாயாஜாலம் செய்த இவர் 4 முறை தேசிய விருதை தட்டிச்சென்றவர், 2 தமிழ் பாடல்களுக்கும், ஒரு மலையாளம் மற்றும் ஒரு தெலுங்கு பாடல் என 4 முறை தேசிய விருதை வென்றார்.


1959 ஆம் ஆண்டு ராம்பிரசாத் என்பவரை மணந்தார், ஜானகியின் இசைப்பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த இவர் 1997 ஆம் ஆண்டு மறைந்தார். இவர்களுக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன் உள்ளார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் ஜானகியின் மகனுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

திறமையான கலைஞர்களை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கும் ஜானகி, "திறமை இருக்கிறது வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக நாம் மட்டுமே பாடி புகழையும் பணத்தையும் சம்பாதித்துக் கொண்டே இருப்பதில் எந்த நியாயமும் இல்லை. வருங்கால சந்ததியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

யாரும் என்னை நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ குறை சொல்லுவதற்கு முன் , என் வருங்கால தலைமுறை புகழ்பெற வேண்டும் என நான் அமைதியாக இசைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டேன்" என்று ஜானகி கூறியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவர் கடைசியாக தனுஷ் நடித்த வேலையிலப்பட்டதாரி படத்தில் அம்மா அம்மா பாடலில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *