சட்டத்தை மீறி 'அலோஹா பார்ட்டி'யா? - விசாரணையில் இறங்கியது திரங்கானு அரசு

top-news
FREE WEBSITE AD

பெசுட், புலாவ் லாங் தெங்காவில் உள்ள ஒரு பிரபலமான விடுதி கடந்த திங்கட்கிழமை 'அலோஹா பார்ட்டி' எனப்படும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ததை அடுத்து, திரெங்கானு அரசாங்கம் விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.

அலோஹா பார்ட்டி ஏற்பாட்டாளர்கள் உள்ளூர் சட்டங்களைளை மீறினார்களா?  இந்த நிகழ்வுகள் குறித்து தேவையான அனுமதிகள் பெறப்பட்டதா? என்பது விசாரணையில் தீர்மானிக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சார சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றக் குழுவின் தலைவர் ரசாலி இட்ரிஸ் கூறினார்.

சமூக ஊடக செய்திகளின்படி அலோஹா விருந்து நிகழ்வில் பல பெண் DJ -க்கள் மற்றும் ஒரு நடனக் குழு இடம்பெற்றுள்ளது.  மேலும் இது குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வு சட்டத்தை மீறியதாகவோ அல்லது அதில் முஸ்லிம்கள் ஈடுபட்டதாகவோ ஆதாரம் இருந்தால் தயவு செய்து அது சம்பந்தப்பட்ட தகவல்களை மதத் துறைக்கு பொது மக்கள்அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]