ஒரு புறம் எட் ஷீரன் மறுபுறம் ஏ.ஆர்.ரஹ்மான் களைகட்டிய சென்னை இசைத் திருவிழா!

top-news
FREE WEBSITE AD

சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் சர்ப்ரைஸ் விசிட்டாக ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தினார்.

4 கிராமி விருதுகள், யூடியூபில் பல மில்லியன் பார்வைகளைக் கடக்கும் பாடல்கள், உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் எனத் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் இசைக்கலைஞர் எட் ஷீரன். லண்டனைச் சேர்ந்த இவரது படைப்புகள் உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்று வரும் நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற அவரது நிகழ்ச்சியைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ரசிகர்கள் இசை மழையில் நனைந்தனர். இந்த இசை நிகழ்ச்சியையொட்டி இப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

இதில் எட் ஷீரன் 'Shape of you' பாடலைப் பாட மறுபுறம் ஏ.ஆர்.ரஹ்மான் 'ஊர்வசி' பாடலைப் பாடினார். இதனால் மொத்த மைதானமுமே 'வைப்' மோடுக்கு மாறியது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *