தென் செபராங் பிறை ”பண்டார் காசியா நெடுஞ்சாலைக்கு துன் அப்துல்லா அஹ்மாட் படாவி பெயர்!

- Muthu Kumar
- 25 Jun, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, ஜூன் 25-
பினாங்கு மாநிலத்தின் பெருநிலப் பகுதியிலுள்ள தென் செபராங் பிறை மாவட்டத்தின் பத்து கவான் வட்டாரத்தைச் சார்ந்த பண்டார் காசியா நெடுஞ்சாலைக்கு, நாட்டின் 5ஆவது பிரதமாராக அரும்பணியாற்றியிருக்கும் துன் அப்துல்லா அஹ்மாட் பாடாவியின் நற்பெயர். அவரை நினைவு கூரத்தக்க வகையில் சூட்டப்பட்டிருப்பது தொடர்பில், இங்கு மாநில ரீதியாக பல்வேறு சமூகத்தினர் மத்தியில் அமோக வரவேற்பு கிட்டியிருக்கிறது.
இதற்கான அங்கீகாரத்தை தாம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக நேற்று காலையில் இங்கு வருகையளித்திருந்த, மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் அறிவித்த வேளையில், நாட்டிற்கும் அவரது பூர்வீகமான பினாங்கு மாநிலத்திற்கும் அவர் ஆற்றியிருக்கும் அளப்பரிய சேவையைப் பெரிதும் போற்றும் வகையில் இந்த சிறப்புமிக்க மறு பெயரிடு, முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
ஒரு மரியாதைக்குரிய தேசியத் தலைவரின் நற்பெயர் இந்த நெடுஞ்சாலைக்கு சூட்டப்படுவதன் வழி, அவருக்கு நாம் செலுத்துகின்ற அர்த்தமுள்ள புகழஞ்சலியாகவும், அதே வேளையில், துரித வளர்ச்சி கண்டு வரும் காசியா நகரத்தின் அடையாளத்தை சிறப்பிக்கும் விதத்திலும் இந்தப் பெயர் மாற்றம் அமையுமென்று தாம் நம்புவதாக முதல்வர் சௌ மேலும் கூறினார்.
இந்தப் பெயரீட்டு விழாவில் பினாங்கு மாநில மாநகர் மன்ற உறுப்பினர்கள் சிலருடன், மாநில உள்ளாட்சி மற்றும் நகரப் பெருந் திட்டத் துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹிங் மூய் லாய் சிறப்புப் பிரமுகராக வருகையளித்திருந்தார்.
Nama Lebuhraya Bandar Cassia di Batu Kawan, Seberang Perai Selatan, Pulau Pinang ditukar kepada nama Tun Abdullah Ahmad Badawi bagi menghargai jasa beliau. Penamaan ini disambut baik oleh pelbagai pihak sebagai penghormatan kepada bekas Perdana Menteri kelima.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *