கருப்பின இட ஒதுக்கீடை பின்பற்றாத தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்!
- Muthu Kumar
- 16 May, 2024
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் கருப்பின வீரர்களுக்காக இட ஒதுக்கீடு கொள்கை நீண்ட நாட்களாக பின்பற்றப்பட்டு வருகிறது.
சமுதாயத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மீண்டு வர இட ஒதுக்கீடு கொள்கை பல்வேறு நாடுகளில் பல்வேறு துறைகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து பலர் முன்னேற முடியும். மேலும் அடித்தட்டு மக்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது இட ஒதுக்கீடு கொள்கை மூலம் தடுக்கப்படும்.
இந்த நிலையில் கருப்பின மக்கள் அதிகமாக வாழும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி காரணமாக கருப்பின வீரர்களுக்கு கிரிக்கெட் அணியில் இடம் பெற பல தடைகள் இருந்தது.
இந்த நிலையில் நெல்சன் மண்டேலா போன்ற பல தலைவர்களின் எழுச்சியால் தென்னாப்பிரிக்காவில் பல சமூக மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் வெள்ளையர் அல்லாத ஆறு பேர் அணியில் இடம்பெற வேண்டும் என்ற இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதில் இரண்டு பேர் கருப்பின வீரர்களாக இருக்க வேண்டும் என்ற இட ஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவை, தவிர வேறு எந்த கருப்பின வீரரும் அணியில் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இரண்டு பேர் கருப்பின வீரர்கள் இருக்க வேண்டும் என்ற விதியை மீறி ரபாடாவை மட்டும் சேர்த்து மற்ற ஐந்து பேர் வெள்ளையர்கள் இல்லாத வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அதில் ரீசா ஹென்ரிக்ஸ், பீஜான் பார்ட்டீன், கேசவ் மகராஜ், தப்ரைஸ் சாம்சி மற்றும் ஒட்டனில் பார்ட்மேன் ஆகிய வீரர்கள் டி20 உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் பிக்லீ மாம்பூலா, ஒரே ஒரு கருப்பினர் வீரருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கியிருப்பது மிகவும் தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி சமூக அளவில் முன்னேறி செல்ல வேண்டுமே தவிர பின்னோக்கி செல்லக்கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோன்று முன்னாள் ஐசிசி தலைவர் ரே மாலி வெளியிட்டுள்ள கருத்தில், இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாததன் மூலம் கருப்பின மக்களுக்கு துரோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட திறமை வாய்ந்த கருப்பினவீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இது குறித்து விளக்கம் அளித்துள்ள தென்னாப்பிரிக்கனி பயிற்சியாளர் வால்டர், லுங்கி கிடி என்ற கருப்பின வீரர் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் எனினும் அவர் தென்னாப்பிரிக்கா விளையாடும் லெவன் அணியில் இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *