விக்ரம் நடித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட தங்கலான் படம் தள்ளி போக காரணம்?

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் தங்கலான். தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்து வரும் விக்ரம் இந்த திரைப்படத்தை மலை போல நம்பி இருக்கிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் பா ரஞ்சித். கர்நாடக மாநிலம் கோலார் தங்க சுரங்கம் தான் இந்த படத்தின் கதைக்களம். அங்கு வேலை பார்த்த ஒரு சமூக மக்களை, குறிப்பிட்ட சில சமூகத்தினர் அடிமையாக வைத்திருந்ததும், ஆங்கிலேயர் காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளையும் தான் இந்த திரைப்படம் தோலுரித்துக் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதில் விக்ரமுடன், மலையாள நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ்  இசை அமைத்திருக்கிறார். படத்தில் விக்ரமின் தோற்றமே பலரும் வியந்து பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

அடர்ந்த தாடி, ஜடையுடன் கூடிய முடி, கையில் தடி, மேலாடை இல்லாமல் வேஷ்டி என மிரட்டலாக காட்சியளிக்கிறார் விக்ரம். இதன் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் CG வேலைகள் இருப்பது, டீசரை பார்க்கும் போதே நமக்கு நன்றாக தெரிந்தது.

நிச்சயம் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு விக்ரம் அடுத்ததாக வீர தீர சூரன் படத்தில் நடிக்க சென்று விட்டார். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளையும் பா ரஞ்சித் முடித்துவிட்டு, தனது அடுத்த திரைப்படத்திற்கான கதைக்களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்.

ஆனால் தங்கலான் திரைப்படம் இன்னும் வெளியான பாடில்லை. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. ஆனால் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது குறித்து பேசி இருக்கும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தங்கலான் படத்தை நாங்கள் ஜூன் 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். இதற்கான போஸ்டரையும் நாங்கள் தயார் செய்தோம். ஆனால் அன்றைய தேதியில், ராயன் திரைப்படம் வெளியாவதாக கூறி விட்டார்கள்.

இது குறித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திடம் பேசும் போது அவர்களும் இதை தான் தெரிவித்தார்கள். இதனால் ரிலீஸ் தேதியை தள்ளிப் போடும் நிலை ஆகிவிட்டது என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே ராயன் திரைப்படமும் தள்ளிப் போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *