வெளியானது குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லர்!

- Muthu Kumar
- 05 Apr, 2025
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது. டீஸரில் திரிஷா, சுனில், பிரசன்னா ஆகியோர் காணப்பட்ட நிலையில் ட்ரெய்லரில் அர்ஜுன் தாஸ், சுனில், ஜாக்கி ஷெராப், கிங்ஸ்லி, யோகி பாபு, சிம்ரன், டாம் சாக்கோ, கார்த்திகேயா தேவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் காணப்படுகின்றனர். டீஸரில் படத்தின் கதையை ரிவீல் செய்யாத இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் ட்ரெய்லரில் ஏறக்குறைய குட் பேட் அக்லியின் கதையை சொல்லிவிட்டார்.
அர்ஜுன் தாஸினால் அஜித்தின் மகன் கார்த்திகேயா தேவிற்கு பிரச்னை போல் காண்பிக்கின்றனர். மகனை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக அஜித் சிறையில் இருந்து வெளிவருவது போன்ற காட்சி ட்ரெய்லரில் உள்ளது. ஒத்த ரூபாய் தாரேன் பாடலோடு அர்ஜுன் தாஸ் என்ட்ரி கொடுக்கிறார்.
அமர்க்களம் அஜித்தின் லுக்கில் சில விநாடிகளுக்கு காட்சிகள் இடம்பெற்றன. திரிஷா, பிரபு, சிம்ரன் ஆகியோர் அஜித்தின் முந்தைய படங்களின் வசனங்களை கூறி அவருக்கு என்ட்ரி கொடுக்கின்றனர். திரிஷா எனது தந்தையை காரில் இருந்து தள்ளிவிட்டது அவன் தான் (மங்காத்தா), பிரபு அவன் பயத்துக்கே பயம் காட்றவன் (பில்லா), சிம்ரன் மிஸ் யூ (வாலி) படங்களின் வசனங்களை கூறுகின்றனர்.
வசனங்களை பார்க்கும் போது செய்த தவறுகளுக்காக சிறையில் இருக்கும் அஜித் தனது மகனின் பிரச்னைக்காக மீண்டும் வெளியே வந்து ஆயுதம் எடுக்கிறார். இரண்டாம் பாகத்திற்கான லீட் ஆக அமர்க்களம் அஜித்தை காண்பிக்கின்றனர்.
குறிப்பாக தீனா படத்தின் வசனம் இடம்பெறுகிறது. கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது; அதே போல அஜித்தின் மங்காத்தா பட வசனத்தை அர்ஜுன் தாஸ் கூறுகிறார்.
தொடர் விடுமுறையை குறிவைத்து குட் பேட் அக்லி ரிலீசாகிறது. இதனால் குட் பேட் அக்லி அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *