புருனே சுல்தான் நலமாக உள்ளார்! – அன்வார்

- Shan Siva
- 24 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 24: மலேசியாவில் அண்மையில் மருத்துவ சிகிச்சை பெற்ற புருனே சுல்தான் சுல்தான் ஹசானல் போல்கியா, நலமாக குணமடைந்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சுல்தான் ஹஸ்னாலை
தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க வாய்ப்பு கிடைத்ததாகக்
கூறினார்.
அவரது
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், மலேசிய சுகாதாரப் பணியாளர்கள் உட்பட மருத்துவக் குழுவினரால்
அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பராமரிப்பில்
ஈடுபட்டுள்ள மலேசிய மருத்துவக் குழுவின் சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு
அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மலேசியா-புருனே இருதரப்பு உறவுகளின் நேர்மறையான முன்னேற்றம் குறித்தும் தாங்கள் விவாதித்ததாக அன்வார் மேலும் கூறினார்!Perdana Menteri Anwar Ibrahim mengesahkan Sultan Brunei, Sultan Hassanal Bolkiah sedang pulih selepas menerima rawatan di Malaysia. Baginda dipantau pakar kesihatan tempatan. Anwar turut menghargai pasukan perubatan serta membincangkan hubungan dua hala Malaysia-Brunei.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *