ஐமேக்ஸ் திரையரங்குகளின் வெளியாகப் போகும் விஜய் நடித்த தி கோட்!
- Muthu Kumar
- 09 Aug, 2024
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி கோட். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்குகின்றார்.
இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் ஐமேக்ஸ் திரையில் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தி கோட் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.படத்தின் போஸ்டர் வெளியானதும் தெரிந்தது. படத்தில் விஜய் முன்று பாடல்கள் பாடியுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானது. இந்த இரண்டு பாடல்களிலும் விஜய் பாடியுள்ளார். முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இரண்டாவது பாடல் அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடல் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. படத்தின் மூன்றாவது பாடலும் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
தி கோட் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். மேலும் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என கேட்கப்பட்டது. அதற்கு, படம் ரிலீஸ் ஆவதற்கு 10 முதல் 15 நாட்களுக்குள் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்தார். தற்பொழுது யாருமே படத்தின் ட்ரைலரை முன்னதாக ரிலீஸ் செய்வது இல்லை. எனவே படத்தின் ட்ரைலர் அதிக பட்சம் படம் ரிலீஸ் ஆவதற்கு 10 நாட்கள் முன்னதாக ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தினை படக்குழு ஐ மேக்ஸ் ஸ்கீரினில் ரிலீஸ் செய்யவுள்ளது என்ற தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஐமேக்ஸ் ஸ்கீரின் தொழில்நுட்பத்துடன் தி கோட் படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவல் தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *