கோர்வை சிலம்பக் கழகத்தின் சிலம்பப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

செர்டாங், மே 13-

இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்ப விளையாட்டு போட்டியை கோர்வை சிலம்பக் கழகம் ஏற்று நடத்தியது.

முதல் முறையாக பாரம்பரிய முறையில் காலடி முறையுடன் நடைபெற்றுள்ள இந்த ஆசிய சிலம்பக் கோர்வை போட்டியில் 4 நாடுகள் பங்குகொண்டுள்ளன என்று போட்டியின் கலை நுட்ப தலைவர் மாஸ்டர் கு.அன்பரசன் தெரிவித்தார். அந்த 4 நாடுகள் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தியாவாகும். இந்த 4 நாடுகளிலிருந்து 300 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்த போட்டி விளையாட்டு இந்த ஆண்டோடு 3ஆவது ஆண்டாக நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முதல் முறையாக பாரம்பரிய முறையில் காலடி முறையுடன் இதில் குழு விளையாட்டு ஈட்டி, மாடு, சுழல்,சுத்தி, இரட்டை வால், கேடயம் கத்தி, குத்துவரிசை. கோது வரிசை. சிலம்ப சண்டை, சொடி குச்சி சண்டை என பிரத்தியேகமாக இப்போட்டி நடைபெற்றது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிலம்ப ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கிரேன் மாஸ்டர் கு அன்பழகன் பரிசுகளை எடுத்து வழங்கினார். இந்த போட்டிக்கு முழு ஆதரவு அளித்த நல்லுள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக மேலும் அவர் தெரிவித்தார்.

Sukan seni mempertahankan diri tradisional India, Silambam, dianjurkan oleh Korvai Silambam Club di Serdang dengan penyertaan dari empat negara: Malaysia, India, Sri Lanka dan Singapura. Pertandingan berlangsung secara tradisional dengan penyertaan 300 peserta.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *