அடுத்த 24 மணி நேரத்தில்- ஜப்பானை உலுக்குமா சுனாமி பேரழிவு?

- Muthu Kumar
- 05 Jul, 2025
எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகளில் ஒருவராக பாபா வங்கா பெரிதும் அறியப்படுகிறார். பல்கேரியாவை சேர்ந்த இவர் 1996ஆம் ஆண்டு தனது 85வது வயதில் காலமானார்.
அதன்பிறகு சிலர் பாபா வங்கா போலவே கணிப்புகளை வெளியிட்டு, அது அப்படியே நிகழ்ந்த சம்பவங்கள் உண்டு. அவர்களை நவீன பாபா வங்கா என்று அழைக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் ஜப்பானை சேர்ந்த ரையோ தத்சுகி. இவர் இன்று (ஜூலை 5, 2025) ஜப்பானில் மிகப்பெரிய பேரழிவு ஒன்று ஏற்படப் போகிறது என்று கணித்துள்ளார்.
அதுவும் கடந்த 2011ஆம் ஆண்டு தோஹோகு நிலநடுக்க பாதிப்புகளை காட்டிலும் மிகவும் பயங்கரமாக இருக்கும் என எச்சரித்துள்ளார். பிரம்மாண்ட சுனாமிகள் தாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவர் சொன்ன நாள் இன்றுதான். இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மணி நேரத்திற்குள் ஏதாவது இயற்கை சீற்றம் ஏற்பட்டு விடுமா? என கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக ஜப்பானில் பேரழிவு என ரையோ தத்சுகி சொன்னதை கேட்டு பலர் தங்களது பயணத் திட்டங்களை ரத்து செய்துவிட்டனர்.
சிலர் ஜப்பானிற்கு செல்வதற்கு பதிலாக வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்து கொண்டனர். நவீன பாபா வங்கா ரையோ தத்சுகியின் பின்னணியை பற்றி பார்க்கும் போது இவர் The Future What I saw என்ற புத்தகத்தை 1999 ஆம் ஆண்டு எழுதினர். அந்த புத்தகத்தில் கூறியுள்ள பல்வேறு விஷயங்கள் அப்படியே கண் முன்னால் அரங்கேறின. நீருக்கு அடியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று சொன்னது முதல் எரிமலை வெடிப்பு வரை பலவும் நடந்திருக்கிறது. மேலும் கடல் கொந்தளித்து பெரிய சுனாமி அலைகளாக விஸ்வரூபம் எடுத்து அழிவு ஏற்படும் எனக் கூறியவையும் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக 2011 ஆம் ஆண்டு மோசமான நிலநடுக்கம் ஏற்படும் என்று ரையோ தத்சுகி கூறியிருந்தார். அந்த பேரழிவு நடந்ததன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் நபராக மாறினார். இவ்வாறு இவரது கணிப்புகள் அடுத்தடுத்து நிகழ, இவர் எழுதிய புத்தகம் பெரும் விவாதப் பொருளானது. ஊடகங்களின் தலைப்புச் செய்தியானது. இவரது கணிப்பில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்பது கொரோனா பெருந்தொற்று. இவர் எழுதிய புத்தகத்தில் வைரஸ் ஒன்று சர்வதேச அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். பலரை கொன்று குவிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தான் 2020 காலகட்டத்தில் கொரோனா தொற்றாக உலகம் பார்த்தது. மேலும் பிரபல பாடகரான பிரெட்டி மெர்க்குரியின் இறப்பை தனது கனவில் கண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதுவும் நடந்திருக்கிறது. இவரது பெரும்பாலான கணிப்புகள் ஜப்பான் நாட்டை சுற்றியே இருப்பது கவனிக்கத்தக்கது. இந்த சூழலில் தான் இன்றைய தினம் மிகப்பெரிய சுனாமி பேரழிவு ஏற்படும் என்று கணித்திருக்கிறார். இதற்கு பயந்து கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. ரையோ தத்சுகியின் கணிப்பு மீண்டும் ஒருமுறை பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *