ஊடகவியலாளர்களுடன் இரவு விருந்துபசரிப்பு - ஆளுநர் பங்கேற்பு

top-news
FREE WEBSITE AD


 2024-ஆம் ஆண்டின் ஹவானா கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களுடன் இரவு விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் உள்ளூர், வெளியூர் ஊடகவியலாளர்கள் என 1000-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சரவாக் ஆளுநர் துன் டாக்டர் வான் ஜூனைடி துவான்கு ஜஃபார், அவரின் மனைவி தோ பவுசியா முகமது சனுசி, சரவாக் பிரிமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹரி ஓபேங், அவரின் மனைவி ஸ்ரீ ஜுமா' அணி துவான்கு  பூஜாங், தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி பட்சில்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அதோடு, ஹவானா 2024 பெர்னாமா ஏற்பாட்டு குழுவிலிருந்து தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ வோங் சுன் வாய், நிர்வாக இயக்குநர் நூருல் அஃபிடா கமாலுடீன், தலைமை ஆசிரியர் அருள் ராஜு துரைராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேசிய ஊடக தினத்தை முன்னிட்டு சரவாக் மாநாட்டின் கொண்டாட்டமாக இந்நிகழ்ச்சி திகழ்ந்தது.

 

தொடர்புத் துறை அமைச்சுடன் இணைந்து சரவாக் மாநில அரசு கைகோர்த்து இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் விருந்து உபசரிப்பு மட்டுமல்லாமல் சராவாக்கின் டா யா, விடாயு போன்ற  குடியினரின் பாரம்பரிய நடனத்தை வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியை ஆழ்த்தினர். அதோடு, உள்நாட்டு இசை கலைஞர்களையும் நாடக கலைஞர்களையும் கொண்டு ஊடகத்தின் பங்களிப்பை மக்களின் பார்வைக்கு நாடகம் மூலம் அரங்கேற்றியது நிகழ்ச்சியை மென்மேலும் மெருகூட்டி மகிழ்ச்சிப்படுத்தியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *