டீன்ஸ் திரைபடம் பற்றி இயக்குனர் பார்த்திபன் மலேசிய ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள்!

top-news
FREE WEBSITE AD

மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக உலகெங்கும் திரையிட்டு அசத்தி வரும்  டீன்ஸ் திரைப்படம் தொடர்பாக நமது மலர் டிவிக்கு பிரத்தியேகமாக பேசிய டீன்ஸ் திரைப்பட இயக்குனரும்,நடிகருமான பார்த்திபன்  அவர்கள், மலேசிய ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.

மலர் டிவி நேயர்களுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கம் இந்த மலர் டிவி வழியாக மலேசிய சினிமா ரசிகர்களிடம் பேசுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய சமீபத்திய படமான டீன்ஸ், ஆங்கிலத்தில் தலைப்பு இருந்தாலும் என்னுடைய தமிழ் பற்று அனைவரும் அறிந்ததே, இந்த படத்தில் நடிக்கும் குழந்தைங்க ஒரு மேல் தட்டு சமூகத்தில் பிறந்து ஒரு மேல் தட்டு பள்ளியில் படிக்கிற சிறுவர்களால் இருப்பதனால் அவர்களுடைய லாங்குவேஜ் தான் நான் பேசணுமே தவிர எனக்கு தெரிஞ்ச தமிழ் அவங்க பேச முடியாது. உதாரணத்துக்கு டீன்ஸ்க்கு பதிலா பதின் பருவம் அப்படின்னு இந்த படத்துக்கு பெயர் வைக்கிறது என்பது இந்த காலகட்டத்துக்கு ரொம்ப பின் தங்கிய ஒரு விஷயமா இருக்கும்.

நான் எப்பவுமே அப்டேட் ஆகுவேனே தவிர கீழ இறங்கி போகவே மாட்டேன். என்னுடைய படங்களுடைய பிளஸ்சும், மைனஸ்சும் அதுவாகவே இருக்கும். உதாரணத்துக்கு இந்த படத்துல நம்ம வந்து டீன்ஸ் என்கிற பெயரில் ஒரு சயின்ஸ் பிக்சன்  படம் பண்ணி இருக்கேன் என்பதை நான் சொல்லவே இல்ல. ஜனங்களுக்கு டீசர்ல என்னுடைய படத்தோட ஒரு பகுதியை மட்டும் காட்டிட்டு மறுபகுதியை ஒரு ரகசியமாகவே வைத்திருந்தேன். நம்ம வாழ்க்கையோட மறு பகுதி என்னன்னு நமக்கு தெரிவதே கிடையாது. அடுத்த நொடி என்னவென்று நமக்கு தெரியறது கிடையாது. எனவே அந்த சஸ்பென்ஸ் அப்படி இருக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டு உங்களுடைய விமர்சனங்கள் மூலமாக இந்த படம் இன்னும் பெருவாரியான மக்களை  ஏசியாவிலேயே மலேசியாதான் டீன்ஸ் திரைப்படம் அதிகமா பார்த்தாங்க என்று சந்தோஷத்தை எனக்கு கொடுப்பதற்கு இந்த மலர் டிவி இன்னும் ஒரு சமூக ஊடகமாக இருக்கும். மலேசியாவில்  படம் பாக்குற ஒவ்வொருத்தருமே ஒரு youtube சேனலாக மாறி ஒவ்வொருத்தரும் அதை 10 பேர் 100 பேரிடம் கொண்டு போய் சேர்க்க இந்த மாதிரி படங்களை தொடர்ந்து நான் செய்வதற்கான வசதியா இருக்கும்.

என்னிடம் பேசிய நண்பர் கூட இந்த படம் வந்து மக்களை போய் அடையறதுக்கு இது ஒரு வசதியா இருக்கும்னு சொன்னார். எப்பவுமே இந்த மவுத் டாக் ஒன்று சொல்லும். படம் பார்த்து வெளியில் வந்து ரசிகருடைய மனஒலி இருக்கு இல்லைங்களா அது போய் எங்கெல்லாம் போய் சேருதோ அங்கே இந்த படம் வந்து பிரபலமாகும். நன்றி வணக்கம் என்று மலர் டிவிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறினார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *