போலிசாரால் கொல்லப்பட்ட ஆடவரின் மனைவி கைது! – கெடா

- Sangeetha K Loganathan
- 06 Jul, 2025
ஜூலை 6,
நேற்றிரவு கெடாவில் உள்ள jalan Sidam Kiri சாலையில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 34 வயது ஆடவர் ஒருவர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து கொல்லப்பட்ட ஆடவரின் மனைவி என நம்பப்படும் 20 வயது இளம்பெண்ணைக் காவல்துறை கைது செய்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட ஆடவரின் வீட்டைக் கண்டறிந்த காவல்துறை சம்மந்தப்பட்ட வீட்டைச் சோதனையிட்ட போது வீட்டிலிருந்து துப்பாக்கிகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பறிமுதல் செய்த நிலையில் வீட்டிலிருந்த 20 வயது இளம் பெண்ணையும் கைது செய்ததாக KUALA MUDA மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 20 வயது இளம் பெண் உயிரிழந்தவரின் மனைவி என கண்டறியப்பட்டதாகவும் கொள்ளையில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகிப்பதால் அவர் கைது செய்யப்பட்டு 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக KUALA MUDA மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார். காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 34 வயது ஆடவர் கடந்த டிசம்பர் மலாக்காவில், கடந்த மார்ச் நீலாயில், தற்போது ஜூன் மாதத்தில் ஈப்போவிலும் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் சுமார் RM6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலானக் கொள்ளை சம்பவங்களில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
Isteri lelaki 34 tahun yang ditembak mati polis kerana disyaki terlibat dalam rompakan ditahan di rumahnya di Kedah. Polis merampas senjata api dan peralatan rompakan. Wanita berusia 20 tahun itu direman tujuh hari bagi siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *